தொலைத்தொடர்புத் துறையின் தமிழ்நாடு வட்டம் சார்பில் ஓய்வூதியர்கள் குறைதீர்ப்பு முகாம் செப்டம்பர் 12-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொலைத்தொடர்புத் துறையின் தமிழ்நாடு வட்டம் சார்பில் ஓய்வூதியர்கள் குறைதீர்ப்பு முகாம் 2025 செப்டம்பர் 12-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முறையான அறிவிக்கை, அதிகாரப்பூர்வ இணையதளமான www.cgca.gov.in/ccatn என்ற தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த குறைதீர்ப்பு முகாம் 12.09.2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை காணொலிக்காட்சி முறையில் நடைபெறவுள்ளது.
ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் குறைகளை சமர்ப்பித்து, இதுவரை தீர்வு காணப்படாமல் நீண்டகாலமாக தொடரும் குறைகளுக்குத் தீர்வு காண்பது குறித்து இந்தக் குறைதீர்ப்பு முகாமில் பரிசீலிக்கப்படும். காணொளி வாயிலான இந்த குறை தீர்ப்பு முகாமில் பங்கேற்பதற்கான இணைப்பு, முகாம் நடைபெறும் தேதிக்கு ஒருநாள் முன்னதாக பகிரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.