தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே சின்னமனூரில் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேனி மாவட்டம் சின்னமனூர் ஊராட்சிக்கு உட்பட்ட பொன்னாகரம் பகுதியில் அரசுக்கு சொந்தமான காலியிடம் இருக்கிறது.
அந்த இடத்தில் அந்த பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான குடும்பத்தைச் சார்ந்தவர்கள் குடிசை அமைத்து இலவச காளி வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இது தொடர்பாக சின்னமனூர் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.