பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தின் மதிப்பை அறிந்து குடிமக்கள் சுய கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் குறித்த வழிகாட்டுதல்களை பரிசீலிக்குமாறும் உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
இந்து கடவுள் குறித்து வஜகத் ஹான் என்பவர் தனது எக்ஸ் தளத்தில் சர்ச்சைக்குரிய பதிவை வெளியிட்டிருந்தார். இதையடுத்து, இவர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் பல மாநிலங்களில் இவர் மீது எப் ஐ ஆர் போடப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து அந்த நபர் மனுதாக்கல் செய்திருந்தார். அதனை கடந்த 23ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சர்மிஷ்டா பனோலி என்பவர் தனது சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்ட வீடியோ பதிவில் வகுப்புவாத கருத்தை தெரிவித்திருந்தார். அதற்காக காவல் துறையால் கைது செய்யப்பட்ட அவர், பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
மேலும் தனது ஊடக பதிவுகளை கான் அழித்துவிட்டார். மன்னிப்பும் கேட்டுவிட்டார் என்று வழக்கறிஞர் வாதிட்டார். இதை கேட்ட நீதிபதிகள் கான் மீது கடுமையான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படக்கூடாது என்று உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர். இந்தநிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த வஜகத் ஹானின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘குடிமக்கள் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தின் அடிப்படை உரிமையின் மதிப்பை அறிந்திருக்க வேண்டும். மீறல்கள் ஏற்பட்டால் அரசு நடவடிக்கை எடுக்கலாம்… ஆனால், அரசு தலையிடுவதை யாரும் விரும்பவில்லை’ என்று நீதிபதி நாகரத்னா கூறினார்.
மேலும் சமூக ஊடக பதிவுகளை தணிக்கை செய்யவேண்டும் என்று தான் அர்த்தப்படுத்தவில்லை என்பதை தெளிவுபடுத்திய நீதிபதி, கருத்து சுதந்திரத்தின் மீதான அரசியலமைப்பு சட்டத்தின் 19(2) பிரிவு நியாயமான கட்டுப்பாடுகளை விதிக்கிறது என்று கூறிய நீதிபதிகள், சமூக ஊடகங்களில் பிளவுபடுத்தும் போக்குகளையும் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் மேலும் கூறினார். இந்த விஷியத்தில் கருத்து சுதந்திரத்தின் அடிப்படை உரிமையின் மதிப்பை குடிமக்கள் அறிந்திருக்க வேண்டும் என்று, பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தின் மதிப்பை அறிந்து குடிமக்கள் சுய கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அதை அறிந்து சுயக் கட்டுப்பாடு மற்றும் சகோதரத்துவத்துடன் சமூக ஊடக பதிவுகளை வெளியிடவேண்டும் என்று தெரிவித்தனர்.
மேலும் தணிக்கை அல்லாத வழிகாட்டுதலை வகுக்க உச்சநீதிமன்றம் பரிசீலித்து வருகிறது. இந்த விஷியத்தில் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்திற்கு சட்ட ஆலோசனைகளை வழங்கவேண்டும் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், வழக்கின் அடுத்த விசாரணை வரை கான் மீது கடுமையான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளக்கூடாது என்ற முந்தைய உத்தரவை மேற்கொள்காட்டி கருத்து தெரிவித்தனர்.
முன்னதாக, பாலிவுட் நகைச்சுவை நடிகர் சமய் ரெய்னாவின் யூடியூப் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபல யூடியூபர் ரன்வீர் அல்ஹாபாதியா தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு எதிரான வழக்கை கடந்த மார்ச் 4ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரித்தது. அப்போது சமூக ஊடக பதிவுகளை முறைப்படுத்த உரிய வழிமுறைகளை மத்திய அரசு வகுக்க வேண்டும் என்றும் ஆனால் அத்தகைய நடைமுறைகள், பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை பறிப்பதாக இருக்கக்கூடாது. அத்துடன் அந்த நடைமுறை சமூக ஊடகப்பதிவை தணிக்கை செய்வதாகவும் இருக்கக்கூடாது என்று உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Readmore: பள்ளி குடிநீர் தொட்டியில் மலத்தை கலந்த மர்ம நபர்கள்.. மீண்டும் ஒரு வேங்கைவயல் சம்பவம்..!