ரஜினிகாந்தின் கூலி படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது..
2025 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய படங்களில் ஒன்றாக ரஜினிகாந்தின் கூலி படம் உள்ளது.. இந்த படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்திற்கான எதிர்பார்ப்பு ஏற்கனவே உச்சத்தில் உள்ளது..
இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் ஷாஹிர், சத்யராஜ் மற்றும் ஸ்ருதி ஹாசன் ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.. மேலும் பாலிவுட் ஜாம்பவான் அமீர் கான் கேமியோ ரோலில் நடித்துள்ளார்.. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.. இந்த படம் சுமார் 375 கோடி பட்ஜெட்டில் உருவாகி உள்ளது.. எனினும் படம் ரிலீசாவதற்கு முன்பே, இப்படம் ப்ரீ ரிலீஸ் வணிகத்தில் லாபம் ஈட்டி வருகிறது.. படத்தின் பட்ஜெட்டில் கிட்டத்தட்ட 90% பணத்தை சன் பிக்சர்ஸ் சம்பாதித்துள்ளதாக கூறப்படுகிறது..
இந்த நிலையில், கூலி படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.. ஆகஸ்ட் 14-ம் தேதி ஒரு சிறப்புக் காட்சியை திரையிட தமிழ்நாடு அரசு அனுமதி உள்ளது.. ஒரு நாளைக்கு 5 காட்சிகள் திரையிடவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.. அதன்படி காலை 9 மணிக்கு சிறப்பு காட்சி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
இதனிடையே தென்னிந்தியா முழுவதும் கூலி படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.. கேரளா மற்றும் கர்நாடகாவில், திரையரங்குகள் காலை 6 மணி சிறப்பு காட்சிககளை அறிவித்துள்ளன.. தமிழ்நாட்டிலும் இதே போன்று காலை 6 மணி சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கி வந்தது.. ஆனால் துணிவு திரைப்படத்தின் சிறப்பு காட்சியை பார்க்க வந்த அஜித் ரசிகர் ஒருவர் உயிரிழந்தார்.. இதையடுத்து தமிழக அரசு 6 மணி சிறப்பு காட்சிகளை ரத்து செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.