தமிழகத்தில் ஏப்ரல் 23-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. அரசியல் தலைவர்கள் பலர் ஏற்கனவே பிரச்சாரத்தை தொடங்கிவிட்ட நிலையில், விஜய் இன்று பெரம்பூரில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளதாக கூறப்பட்டது… தேர்தலில் அவர் பெரம்பூரில் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், அண்ணாநகர், விருகம்பாக்கம் ஆகிய 5 இடங்களில் இன்று விஜய் பிரச்சாரம் செய்யவிருந்தார்..
ஆனால் இன்று பெரம்பூர் தொகுதியில் எம்.கே.பி நகர் பேருந்து நிலையம் அருகே விஜய் பிரச்சாரம் செய்ய காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. தவெக தரப்பில் 3000 நபர்கள் வருவார்கள் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், 3000 பேருக்கு இடம் போதாது என்று காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது. மாற்று இடம் கேட்டு விண்ணப்பம் தர காவல்துறை தரப்பு அறிவுறுத்தி உள்ளது.. இதையடுத்து திமுகவுக்கு சார்பான அதிகாரிகள் தனது பிரச்சாரத்தை முடக்குவதாக விஜய் கண்டனம் தெரிவித்திருந்தார்..
இந்த சூழலில் தேர்தல் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து புகார் அளிக்க தலைமை செயலகம் சென்றார் விஜய்.. அங்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரியை நேரில் சந்தித்து புகார் அளித்தார்.
இந்த நிலையில் கொளத்தூர் தொகுதியில் வரும் 30-ம் தேதி விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.. ஏற்கனவே பெரம்பூரில் அனுமதி வழங்கப்பட்ட நிலையில் தற்போது கொளத்தூர், வில்லிவக்கத்தில் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் பரப்புரை மேற்கொள்ள விஜய்க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் மதியம் 2 மணி முதல் பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.. இதன் மூலம் வரும் 30-ம் தேதி முதல் விஜய் தனது பிரச்சாரத்தை தொடங்க உள்ளார்.



