Breaking : தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியானது..! பிரேமலதா, விஜய பிரபாகரன் எந்த தொகுதியில் போட்டி..?

dmdk dmk 1

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக, சசிகலா – ராதாஸ் அணி என 5 முனைப் போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வேண்டும் என திமுகவும், எப்படியாவது இந்த முறை ஆட்சிக்கு வர வேண்டும் என்று அதிமுகவும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.. 


தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், ஆளுங்கட்சியான தி.மு.க மெகா கூட்டணியை அமைத்துள்ளது.. 20-க்கும் கட்சிகள் இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ளன.. அதன்படி திமுக கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தே.மு.தி.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.. கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் எந்தெந்த தொகுதிகள் என்பது இன்று அறிவிக்கப்பட்டது.

அந்த வகையில் முதன்முறையாக திமுக கூட்டணியில் இணைந்துள்ள தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.. அவை எந்தெந்த தொகுதிகள் என்ற அறிவிப்பு இன்று வெளியானது..

இந்த நிலையில் தேமுதிக வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி பொதுச்செயலாளர் பிரேமலதா வெளியிட்டுள்ளார்..

தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல் :

பிரேமலதா – விருத்தாசலம்

விருதுநகர் – விஜய் பிரபாகர்

சேலம் மேற்கு – அழகாபுரம் மோகன்ராஜ்

போளூர் – சரவணன்

பல்லாவரம் – அனகை முருகேசன்

திருத்தணி – கிருஷ்ணமூர்த்தி

ஓமலூர் – இளங்கோவன்

மயிலம் – வெங்கடேசன்

தருமபுரி – இளங்கோவன்

குடியாத்தம் – பிரதாப்

Read More : அனுமதி கிடைத்தது.. வரும் 30-ம் தேதி முதல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் விஜய்..! முதல்வர் தொகுதியில் பரப்புரை..!

RUPA

Next Post

ஏப்ரல் 1 முதல் புதிய வரி முறை அமல்..! டேக் ஹோம் சம்பளம் குறையுமா..?

Sun Mar 29 , 2026
புதிய நிதியாண்டு தொடங்கியுள்ள நிலையில், ‘வருமான வரிச் சட்டம் 2025’ நடைமுறைக்கு வருவதால், நாடு முழுவதும் உள்ள ஊதியம் பெறும் ஊழியர்களிடையே ஆர்வமும் கவலையும் எழுந்துள்ளது. ஏப்ரல் 1, 2026 முதல் நடைமுறைக்கு வரும் புதிய வருமான வரி விதிகள், வரி விகிதங்களை உயர்த்தாவிட்டாலும், ஊதியக் கட்டமைப்பில் முக்கிய மாற்றங்களைக் கொண்டுவருகின்றன. இந்த மாற்றங்களைச் செயல்படுத்தும் பொறுப்பை வருமான வரித் துறை ஏற்கும். ஊழியர்களுக்கான ‘நிறுவனத்தின் மொத்தச் செலவு’ (CTC) […]
money 2

You May Like