சென்னை, மதுரை உள்ளிட்ட 7 இடங்களில் அதிரடி முகாம்! PF, ESI குறைகள் தீர்க்க இதோ சூப்பர் வாய்ப்பு!

PF Epfo Money

சென்னை, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் 7 இடங்களில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO) மற்றும் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் (ESIC) சார்பில் சிறப்பு குறைதீர்ப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.


நிதி உங்கள் அருகில் திட்டம்

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் EPFO மற்றும் ESIC அமைப்புகள் இணைந்து, பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து விரைவாக தீர்வு வழங்கும் நோக்கில் இந்த முகாம்களை ஏற்பாடு செய்துள்ளன. தமிழகத்தில் சென்னை அயனாவரம், மதுரை முனிச்சாலை, ராமநாதபுரம், தேனி, சிவகங்கை, சிவகாசி மற்றும் பழனி ஆகிய 7 இடங்களில் முகாம்கள் நடைபெற உள்ளன.

சென்னை அயனாவரத்தில் உள்ள ESIC கிளை அலுவலகத்தில் 2026 நவம்பர் 27-ம் தேதி இந்த முகாம் நடைபெறுகிறது. மற்ற இடங்களில் உள்ள ESIC கிளை அலுவலகங்களிலும் முகாம்கள் நடத்தப்பட உள்ளன. EPFO மற்றும் ESIC உறுப்பினர்கள், ஓய்வூதியதாரர்கள் தங்களது கணக்கு, ஓய்வூதியம், காப்பீடு மற்றும் இதர சேவைகள் தொடர்பான புகார்கள், கோரிக்கைகள், சந்தேகங்களை அதிகாரிகளிடம் நேரடியாக தெரிவித்து தீர்வு பெறலாம். முகாமில் பங்கேற்க விரும்புவோர் https://t.ly/nPTt என்ற இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

maha

Next Post

நன்றாகத் தூங்கியும் பகலில் தூக்கம் வருகிறதா? உடல் சோர்வுக்கான 7 முக்கிய காரணங்கள்!

Thu Nov 26 , 2026
இரவு நேரத்தில் போதுமான நேரம் தூங்கிய பிறகும், காலையில் எழுந்தவுடன் புத்துணர்ச்சியாக உணர முடியவில்லையா? பகல் முழுவதும் தூக்கம் வருவது, உடல் சோர்வாக இருப்பது, எந்த வேலையிலும் ஆர்வம் இல்லாமல் இருப்பது போன்ற பிரச்சினைகளைச் சந்திக்கிறீர்களா? அப்படியானால், இதை சாதாரண சோர்வு என்று அலட்சியப்படுத்தக் கூடாது. ஒருவர் தினமும் 7 முதல் 9 மணி நேரம் தூங்குவது பொதுவாகப் பரிந்துரைக்கப்படுகிறது. இருப்பினும், தூங்கும் நேரத்தின் அளவு மட்டுமின்றி, தூக்கத்தின் தரமும் […]
daysleep

You May Like