Breaking: பாமக – பாஜக கூட்டணி உறுதி…! 10 தொகுதிகள் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தலை பாஜகவுடன் இணைந்து சந்திக்கிறது பாமக என கூட்டணியை உறுதி செய்தார் பாமக மாநில பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன்.

பாஜக கூட்டணியில் இருந்து விலகிய அதிமுக, மெகா கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது வரை சில சிறிய கட்சிகள் மட்டுமே கூட்டணியில் இணைந்துள்ளன. மேலும், பாஜகவும் தமது தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க வியூகம் அமைத்து வருகிறது.

தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும், இரு கட்சிகளும் கூட்டணியை இறுதி செய்யாமல் இருந்து வந்தது. பாஜகவுடன் கூட்டணி இல்லை என தேமுதிக தரப்பில் திட்டவட்டமாக கூறப்பட்டுள்ளது. ஆனாலும், அதிமுகவுடன் தற்போது வரை தொகுதி பங்கீட்டை நிறைவு செய்யவில்லை. இரு தரப்பிலும் 2-ம் கட்ட பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ளன.

பாமக உயர்மட்ட குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பாஜக கூட்டணியில் பாமக இணைய போவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 10 நாடாளுமன்ற தொகுதி மற்றும் ஒரு மாநிலங்களவை கேட்க உள்ளதாக சொல்லப்படுகிறது. தேர்தல் கூட்டணி குறித்த முடிவை பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பார் என பாமக வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலை பாஜகவுடன் இணைந்து சந்திக்கிறது பாமக என கூட்டணியை உறுதி செய்தார் பாமக மாநில பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன்.

Vignesh

Next Post

பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் மருத்துவமனையில் அனுமதி..!

Mon Mar 18 , 2024
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், வர்ணனையாளருமான லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து “எக்ஸ்” வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள க்ஷ்மன் சிவராமகிருஷ்ணன், வாழ்க்கை கடினமாகிவிட்டது என்றதுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். இந்த பதிவை கண்ட ஒருவர் விரைவில் குணமாக வேண்டும் என்று கூறியதற்கு, “அது நடக்கும் என்று நான் நினைக்கவில்லை” என்று பதில் கூறியுள்ளார் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன். அவரின் இந்த […]

You May Like