2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. தேர்தலை முன்னிட்டு கூட்டணி பேச்சு வார்த்தைகளும் சூடு பிடித்துள்ளன. இந்த தேர்தலில் அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைத்துள்ளன. இரு கட்சிகளும் இணைந்து வரும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள உள்ளன. இந்நிலையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்தது தேமுதிக. ராஜ்யசபா சீட்டு விவகாரத்தில் இரு கட்சிகளுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது.
அதே நேரத்தில் தேமுதிக தொடர்ந்து திமுக அரசை பாராட்டி வருகிறது. திமுகவின் திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலினையும் புகழ்ந்து பேசி வருகிறார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த். இதனால் ஏற்கனவே அதிமுகவுக்காக பாஜகவை பகைத்துக் கொண்ட தேமுதிக திமுக உடன் கூட்டணி அமைக்குமா என்ற வியூகம் எழுந்துள்ளது. இதனிடையே பாமகவும் திமுக தலைமையிலான கூட்டணியில் இணைய விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.
குறிப்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் திமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்று, வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விவகாரத்தில் தான் அன்புமணிக்கும் ராமதாஸுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அன்புமணி ராமதாஸ் அதிமுக பாஜக தலைமையிலான கூட்டணியில் இணைய விரும்புவதாகவும் ஆனால் ராமதாஸ் திமுக தலைமையிலான கூட்டணியில் இணைய விரும்புவதால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
Read more: கடைசி வாய்ப்பு.. இதை செய்யலைன்னா ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும்..!! உடனே அப்டேட் பண்ணுங்க..