பரபரப்பு…! டிசம்பர் 5-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவேன்… பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு…!

ramadass 2025

வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டை வழங்க வலியுறுத்தி அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு டிசம்பர் 5-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; அனைத்து ம‌க்க‌ளுக்குமான‌ சாதிவாரி க‌ண‌க்கெடுப்பை உட‌னே ந‌ட‌த்த வேண்டும்.அதுவ‌ரை இடைக்கால ஏற்பாடாக வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு தனி ஒதுக்கீட்டைத் த‌டுக்கின்ற நீதிம‌ன்ற‌ தடையாணையைப் போக்கி வன்னியர்களுக்கு இட‌ ஒதுக்கீட்டை வ‌ழ‌ங்க வேண்டும் என்ற முழக்கங்களை முன்வைத்து டிசம்பர் 5-ம் தேதி, அனைத்து மாவ‌ட்ட‌ ஆட்சியர் அலுவலகங்களின் முன்பாக‌ அறவழியிலான தொடர் முழக்கப் போராட்டத்தை நடத்துவதென்று வன்னியர் சங்கமும், பாட்டாளி மக்கள் கட்சியும் முடிவு எடுத்துள்ளது.

இந்தப் போராட்டத்தை ஒருங்கிணைத்து முறைப்படுத்தவும், வ‌ன்னிய‌ர்க‌ளின் தனி ஒதுக்கீட்டுக்கான நியாயத்தை அனைத்துத் த‌ர‌ப்பின‌ருக்கும் தெளிவுபடுத்தவும் 9 பேரைக் கொண்ட போராட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் வழிகாட்டுதலில், வ‌ன்னிய‌ர்க‌ளின் இட‌ஒதுக்கீட்டுப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்த பாட்டாளி சொந்தங்களும், வன்னிய உறவுகளும் முனைப்புடன் செயலாற்ற வேண்டும். இந்த போராட்டத்தை தொட‌ர்ந்து, தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளைப் பொறுத்து, அடுத்தக்கட்ட போராட்டங்கள் குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

புத்தாண்டு பேரழிவு!. 2026 ஆம் ஆண்டில் இந்த பயங்கரம் நிகழும்!. ரஷ்யா-அமெரிக்கா இடையே 3ம் உலகப்போர்!. பாபா வங்கா திகிலூட்டும் கணிப்பு!

Fri Sep 26 , 2025
2026 ஆம் ஆண்டிற்கான பாபா வங்காவின் கணிப்புகள் ஏற்கனவே மக்களை பயமுறுத்துகின்றன. வேற்றுகிரகவாசிகளுடனான தொடர்பு, இயற்கை பேரழிவுகள் மற்றும் மூன்றாம் உலகப் போர் ஆகியவை இந்த கணிப்புகளில் அடங்கும். பல்கேரியாவைச் சேர்ந்த பாபா வங்கா தனது தீர்க்கதரிசனங்களுக்காகப் புகழ் பெற்றார். பார்வையற்றவராக இருந்தபோதிலும், அவர் தனது கணிப்புகளால் உலகம் முழுவதையும் வியப்பில் ஆழ்த்தினார். பாபா வங்கா 1996 இல் காலமானார். அவரது மரணத்திற்குப் பிறகும், அவரது கணிப்புகள் தொடர்ந்து மக்களைக் […]
baba vanga new 11zon

You May Like