பாமகவின் ஜி.கே.மணி திடீர் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியின் கெளரவ தலைவரும், சட்டமன்ற குழு தலைவருமான ஜி.கே மணி நெஞ்சுவலி காரணமாக வானகரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. கடுமையான முதுகு தண்டு வலி பிரச்சனையால் அவர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் விரைவில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பாமக தலைவர் ராமதாஸுக்கும், அன்புமணி ராமதாஸுக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கட்சிப் பொதுக் கூட்டத்தில் இருந்தே மோதல் போக்கு நிலவி வருகிறது. ராமதாஸ் ஆதரவாளர்கள் ஒருபுறம், அன்புமணி ஆதரவாளர்கள் மறுபுறம் என செயல்பட்டு வருகின்றனர். பாமகவில் தந்தை மகன் மோதல் தொடங்கியது முதல் பாமக கெளரவத்தலைவர் ஜி.கே.மணி ராமதாஸ் ஆதரவாளராக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஜி.கே.மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி பாமக தொண்டர்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.