பாமகவின் 10 ஆண்டு போராட்டம்…! மத்திய அரசு கொண்டு வந்த ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம்…! அன்புமணி மகிழ்ச்சி…!

3161612 anbumaniramadoss 1

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் நிறைவேற்றப் பட்டதில் மகிழ்ச்சி. தற்கொலைகளும், குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வருவதற்கும் முடிவு கட்டப்படும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: பணம் கட்டி விளையாடப்படும் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்கான சட்ட மசோதா நாடாளுமன்ற மக்களவையில் நேற்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது. சூதாட்டங்கள் மற்றும் பண இழப்பிலிருந்து மக்களைக் காக்கும் நோக்குடன் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக பாமக போராடி வருகிறது. அதனால், தமிழகத்தில் இரு முறை ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் நிறைவேற்றப்பட்டும் அதனால் பயன் இல்லை.

ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்றவை சூதாட்டம் அல்ல, அவை திறன் விளையாட்டு என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததால், அந்த சூதாட்டங்கள் இன்னும் தொடர்கின்றன. சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டை திமுக அரசு இன்னும் விசாரணைக்கு கொண்டு வராததால், ஆன்லைன் சூதாட்டங்களையும் தடுக்க முடியவில்லை; அதனால் நிகழும் தற்கொலைகளையும் தடுக்க முடியவில்லை. கடந்த சில நாள்களுக்கு முன்பு வரை தமிழகத்தில் 96 பேர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இத்தகைய சூழலில் தான் ஆன்லைன் ரம்மி, போக்கர் ஆகியவற்றையும் சூதாட்டம் என்று அறிவித்து அவற்றை தடை செய்வதற்கான சட்டம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதை மாநிலங்களவையிலும் நிறைவேற்றுவதுடன், உச்சநீதிமன்றத்திலும் பாதுகாக்க வேண்டும். அதன் மூலம் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து லட்சக்கணக்கான குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வருவதையும், பலர் தற்கொலை செய்து கொள்வதையும் மத்திய அரசு தடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

கூட்டுறவுச் சங்கங்களில் காலி பணியிடங்கள்...! அரசு சார்பில் இலவச பயிற்சி வகுப்பு.‌...!

Thu Aug 21 , 2025
சேலம் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களில் காலியாக உள்ள எழுத்தர், உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்விற்கு இலவசப் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; சேலம் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவுச் சங்கங்களில் காலியாக உள்ள எழுத்தர். உதவியாளர் என மொத்தம் 148 காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு https://www.drbslm.in என்ற இணையதளம் வழியாக Online […]
tn govt 20251 1

You May Like