கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் சரல்குன்னு பகுதியை சேர்ந்தவர் ஜெயேஷ் (29). இவருடைய மனைவி ரஷ்மி (23). ரஷ்மி ஆலப்புழாவை சேர்ந்த ஒரு இளைஞருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்துள்ளார். ஒரு நாள் ரஷ்மி அந்த இளைஞனை தனியாக சந்திக்கலாம் எனக் கூறி வீட்டிற்கு அழைத்துள்ளார். இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். அப்போது அங்கு மறைந்திருந்த ரஷ்மியின் கணவர் ஜெயேஷ், அதை தனது செல்போனில் படம் எடுத்திருக்கிறார்.
பின்னர் அறைக்குள் வந்த ஜெயேஷ், மனைவியுடன் சேர்ந்து அந்த வாலிபரை மிரட்டி அவரிடம் இருந்த விலை உயர்ந்த செல்போன் மற்றும் ரூ.6 ஆயிரத்தை பறித்தனர். இங்கு நடந்ததை வெளியே சொல்ல கூடாது எனக் கூறி, இளைஞனின் 2 கைகளையும் கட்டி தொங்க விட்டதுடன், மர்ம உறுப்பில் 26 முறை ‘ஸ்டேப்ளர் பின்’களை அடித்து சித்ரவதை செய்துள்ளனர்.
மேலும், அவரது கை விரல் நகங்களை பிடுங்கியுள்ளனர். பின்னர் அவரது வாயை துணியால் கட்டி ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் உடலை போட்டுவிட்டு வந்துள்ளனர். அப்போது அந்த வழியாக சென்ற ஒருவர், அந்த வாலிபரின் முனகல் சத்தம் கேட்டு அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தார்.
தகவலின் பேரில் கேரளாவின் ஆரன்மூளா போலீசார், இளைஞர் சிகிச்சை பெறும் மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தியிருக்கிறார்கள். அப்போது ஜெயேஷ் மற்றும் அவரது மனைவி ரஷ்மி குறித்து போலீசாரிடம் நடந்ததை விளக்கியுள்ளார். இளைஞன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், பணத்துக்காக ரஷ்மி இளைஞர்களை குறிவைத்து வீட்டிற்கு அழைத்து பணம், செல்போன் உள்பட உடமைகளை பறிப்பாராம். இந்த சம்பவத்தில் மனைவிக்கு உடந்தையாக ஜெயேஷ் இருந்து வந்தது தெரியவந்தது. முன்னதாக ஓணம் விழா அன்று தன்னுடன் வேலை பார்த்து வந்த ஒரு இளைஞரை ரஷ்மி வீட்டிற்கு அழைத்துள்ளார். பின்னர் அவரிடம் இருந்து பணத்தை பறித்தும் கட்டி தொங்கவிட்டு சித்ரவதை செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
Read more: தமிழக அஞ்சல் துறை சார்பில் குறை தீர்க்கும் முகாம்…! 22-ம் தேதிக்குள் இதை செய்ய வேண்டும்..!