திண்டுக்கல்லில் அமைச்சர் ஐ. பெரியசாமியின் வீட்டின் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள கிராமப்புறங்களில் அரசு திட்டங்களை கொண்டு செல்லும் பணியில் மக்கள் நல பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பணி நிரந்தரம், சிறப்பு காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் நலப் பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தை அறிவித்திருந்தனர். ஆனால் இதற்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை.. ஊரக வளர்ச்சி துறையிடம் பலமுறை மனுக்கள் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர்.
அதன்படி திண்டுக்கலில் இன்று மக்கள் நலப் பணியாளர்கள் இன்று போராட்டம் நடத்த இருந்தனர். இதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் நலப் பணியாளர்களை காவல்துறையினரை தடுத்து வருகின்றனர்.. இதுவரை 40 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் ஊரக வளரக வளர்ச்சித்துறை, அமைச்சர் ஐ பெரியசாமியின் கீழ் வருவதால், அமைச்சரின் வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திண்டுக்கல் முழுவதும் 600 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அமைச்சர் வீட்டில் தற்போது 75-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Read More : பல ஆண்டு கால வன்மம்.. அவதூறுகள் பற்றி கவலை இல்லை.. அது உற்சாகம் தான்.. ஸ்டாலின் பேச்சு…