திருச்சியில் பரபரப்பு..!! பிரபல ரவுடி கொம்பன் ஜெகன் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை..!!

திருச்சி மாவட்டம் சனமங்கலம் அருகே பிரபல ரவுடி கொம்பன் ஜெகன் போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். போலீசாரை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றபோது பிரபல ரவுடி கொம்பன் ஜெகன் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். உதவி ஆய்வாளர் வினோத்தை தாக்கிவிட்டு தப்ப முயன்றபோது ஜெகன் மீது துப்பாக்கிச்சூட் நடத்தப்பட்டது.

சுட்டுக் கொல்லப்பட்ட கொம்பன் ஜெகன் மீது பல கொலை வழக்குகள் உள்ள நிலையில், கூலிப்படையாகவும் செயல்பட்டு வருவதுடன் அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. என்கவுன்ட்டர் செய்யப்பட்ட ஜெகனின் உடல் திருச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

ஆசை பட நாயகி சுவலட்சுமி நியாபகம் இருக்கா.? இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா.?

Wed Nov 22 , 2023
தமிழ் சினிமாவில் ஆசை திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சுவலட்சுமி. இவர் மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவை பூர்வீகமாக கொண்டவர். ஆசை படத்தை தொடர்ந்து கோகுலத்தில் சீதை, கல்கி, லவ் டுடே என அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக வலம் வந்தவர். பொதுவாக இவர் குடும்ப பாங்கான திரைப்படங்களிலும் கதாபாத்திரங்களிலும் மட்டுமே நடித்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமா மட்டுமல்ல, தெலுங்கு, மலையாளம் […]

You May Like