காவல் நிலையத்திற்குள் கர்ப்பிணி மீது தாக்குதல்.. இதுதான் திராவிட மாடலா..? – நயினார் நாகேந்திரன் கண்டனம்

Nainar nagendran 2025

பாலியல் புகார் அளிக்க சென்ற கர்ப்பிணி உட்பட மூன்று பெண்களை காவலர்கள் தாக்கிய விவகாரம் அரசியல் ரீதியாக பேசுபொருளாகிய நிலையில், இச்சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், திருவள்ளூர் மாவட்டம், கனகம்மாசத்திரம் காவல்நிலையத்தில் பாலியல் தொல்லை குறித்து புகார் அளிக்கச் சென்ற 5 மாதக் கர்ப்பிணி உட்பட மூன்று பெண்களை காவலர் கொடூரமாக தாக்கியதாக வெளிவந்துள்ள காணொளி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

குற்றஞ்சாட்டப் பட்டவரிடம் கையூட்டு பெற்றுக் கொண்டு பாதிக்கப்பட்டோரை சரமாரியாகத் தாக்கும் அளவிற்கு காவல்துறை அதிகாரிக்கு துணிச்சல் எங்கு இருந்து வந்தது? அதிலும் ஒரு ஏழை கர்ப்பிணி பெண்ணை தாக்கும் அளவிற்கா காவல்துறையினரிடம் மனிதத்தன்மை மலிந்துவிட்டது? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார்.

குற்றவாளிகளிடமிருந்து பாதிக்கப்பட்டோரை காக்க வேண்டிய காவல்துறையே பாதிக்கப்பட்டோரை தாக்கினால், திராவிட மாடல் ஆட்சியில் எங்கு சென்று நீதி கேட்பது என்று புரியவில்லை. காவல்துறையின் மாண்பை கேள்விக்குறியாக்கும் இச்சம்பவத்தில் உடனடியாக தலையிட்டு தீர விசாரணை செய்து, அதிகார மமதையில் அராஜகத்தின் ஊற்றிடமாக செயல்பட்டு மூன்று பெண்களை தாக்கிய காவலர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினை நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

Read more: ‘தக் லைப்’ படத்திற்காக மணிரத்னம் மன்னிப்பு கேட்கவில்லை..!! – தயாரிப்பு நிறுவனம் விளக்கம்

Next Post

ஸ்கூட்டியில் வேகமாக சென்ற மாணவியை கன்னத்தில் பளார் விட்ட டிராபிக் போலீஸ்..!! - வைரலாகும் வீடியோ

Wed Jun 25 , 2025
மூன்று மாணவிகள் ஒரு ஸ்கூட்டரில் வேகமாக சென்றதால் ஒரு பெண் போக்குவரத்து காவலர் அவர்களை இடைமறித்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, பொதுமக்கள் மத்தியில் கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது. மகாராஷ்டிராவின் லாதூர் நகரில் முக்கிய சாலையில், ஸ்கூட்டரில் வேகமாகவும், சட்டவிரோதமான முறையில் மூன்று பேர் ஒரே வாகனத்தில் பயணித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, போக்குவரத்து காவலராக பணியாற்றும் பிரணிதா முஸனே என்ற […]
maharastra traffic

You May Like