fbpx

70 வயசு ஆகிட்டு.. உடல்நலக்கோளாறு இருக்கு..!! நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் – EPS கோரிக்கை

எனது வயது, உடல் நலன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும், எனக்கூறி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தயாநிதி மாறன் எம்.பி மேம்பாட்டு நிதியில் 75 சதவிகிதத்தை செலவு செய்யவில்லை என்று குற்றம்சாட்டினார். ஆனால், தான் 95 சதவிகிதம் நிதியை செலவு செய்துள்ளதாகத் தெரிவித்த தயாநிதி மாறன், இபிஎஸ் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையென்றால் சட்ட நடவடிக்கை மேற்கொள்வேன் என்று எச்சரிக்கை விடுத்தார்.

இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து எந்தவித விளக்கமும் அளிக்கப்படவில்லை. இதையடுத்து முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான பழனிசாமிக்கு எதிராக தயாநிதி மாறன் எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.

தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்காக சென்னை எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் சிறப்பு நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தனது வழக்கறிஞர் படையுடன் இன்று நேரில் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயவேல், விசாரணையை செப்டம்பர் 19ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார். இதனைத் தொடர்ந்து அடுத்து வரும் விசாரணைகளில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

அந்த மனுவில், “தனக்கு 70 வயதாகி விட்டதால் மூத்த குடிமகன் என்ற முறையிலும், சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் என்ற முறையிலும், முன்னாள் முதல்வர் என்ற முறையிலும் அடுத்தமுறை வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும். நீதித்துறையின் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளேன். உடல்நலக்கோளாறு காரணமாக மருந்து, மாத்திரைகள் உட்கொண்டு வருகிறேன்.

இந்த வழக்கை தாமதப்படுத்தும் நோக்கம் இல்லை. எனவே, எனது வயது, நிரந்தர குடியுரிமை, உடல் நலன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும்” எனக் கோரியிருந்தார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணையை வரும் செப்டம்பர் 19-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Read more ; Bigg Boss Tamil Season 8 |ஆரம்பமான பிக்பாஸ் சீசன்.. பல கோடி செலவில் செட்.. போட்டியாளர் இவங்கதான்..!!

English Summary

Edappadi Palaniswami has filed a petition in the special court, considering my age and health.

Next Post

Google Search-இல் வந்த புதிய அம்சம்..!! இனி இதை டைப் செய்தாலே போதும்..!!

Tue Aug 27 , 2024
Most of the companies are working at a whirlwind pace in the development related to Artificial Intelligence, abbreviated as AI.

You May Like