இலங்கையில் இருந்து வந்த தமிழ் குடும்பங்களை அகதிகளாக முகாமில் வைக்கப்படுவதற்கு கண்டனம் தெரிவித்து 20-ம் தேதி கூடலூரில் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.
இது தொடர்பாக பா.ஜ.க. மாநிலத் தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். ’’இலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட இந்திய தமிழ் குடும்பங்களுக்கு மறுவாழ்வு அளிக்க நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, குன்னூர், கூடலூர், பந்தலூர் ஆகிய இடங்களில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
இவர்களில் 15,000 பேர் மீள் குடியேற்றப்பட்ட குடும்பங்கள். இவர்கள் இன்று வரைக்கும் தமிழக அரசின் தமிழ்நாடு தேயிலை தோட்டத் தொழிலை நம்பி வாழ்கின்றனர். ஆனால், ’’டான்டீ’’ நிர்வாக இயக்குனர், தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்தில் ’டான்டீ’ வசமுள்ள நிலத்தின் குறிப்பிடத்தக்க பகுதியை அந்த நிறவனம் நஷ்டம் ஏற்படாமல் இருக்க வனத்துறையிடம் திருப்பி ஒப்படைக்க பரிந்துரைத்ததாக தெரிவித்தார். டான்டீ நிறுவனத்தின் பரிந்துரைகளை ஏற்று நிலங்களை மீண்டும் வனத்தின் வசம் ஒப்படைக்க தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
நிர்வாக இயக்குனரின் பரிந்துரைபடி டான்டீ நிறுவனத்திற்கு ஆண்டுக்கு ரூ.5.98கோடி மிச்சமாகும் எனவும் இந்த சிறிய தொகைக்காக இடம்பெயர்ந்த மக்களை அகதிகள் ஆக்குவதா என்பதை கூட தமிழக அரசு சிந்திக்கவில்லை என கூறினார்.
அரசின் இந்த முடிவால் அப்பாவி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கவலைக்கிடமாக உள்ளது. டான்டீ நிர்வாகம், வேலைக்காக வேறு தோட்டங்களுக்கு செல்லாதவர்கள் விருப்ப ஓய்வு பெற வேண்டும் என்பதால் 2400 குடும்பங்கள் மற்றும் 15000 மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து நீலகிரி மாவட்டம் கூடலூரில் வரம் 20ம் தேதி பா.ஜ.க. தலைமையில் போராட்டம் நடத்த உள்ளது. என குறிப்பிட்டிருந்தார்.