விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. முன்னதாக, பொதுக்குழு உறுப்பினர்களுடன் விஜய் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தில் 17 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த பொதுக்குழுவில் பேசிய விஜய், “திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும். தமிழ்நாட்டில் பெண்களின் வாழ்க்கையே போராட்டமாக இருக்கிறது. இந்த பெண்கள் தான் உங்கள் அரசியலை முடிவுக்கு கொண்டு வரப்போகிறார்கள். உங்கள் ஆட்சியை விமர்சித்தால் மட்டும் ஏன் இவ்வளவு கோபம் வருகிறது? விமர்சித்தால் கோபப்படுகிறார் மன்னராட்சி முதல்வர்.
பிரதமர் மோடியின் பெயரை சொல்ல எனக்கு பயம் என்கிறார்கள். மாண்புமிகு திரு மோடி ஜி அவர்களே. உங்களை பெயரை சொல்ல எனக்கு பயமில்லை. மத்தியில் பாஜக தானே ஆட்சி செய்கிறது. ஏன் ஜி தமிழ்நாடு என்றால் உங்களுக்கு அலர்ஜி..?” என்று கடுமையாக விமர்சித்துள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலில் ஒரு மாபெரும் மாற்றத்தை கொண்டு வருவோம். அதை தடுக்க சிலர் பகல் கனவு காண்கின்றனர்.
என் மக்களுக்கான அரசியலை யாராலும் தடுக்க முடியாது. தமிழ்நாட்டிடம் விளையாட வேண்டாம் பிரதமர் சார். தவெக ஆட்சி அமைந்ததும் சட்டம் ஒழுங்கை திறம்பட வைத்திருப்போம். பெண்களின் பாதுகாப்பை 100% உறுதி செய்வோம்” என்றார்.