தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று (மார்ச் 14) கூடிய நிலையில், 2025-26ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் உரையில் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட உள்ள திட்டங்கள், துறைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி விவரம் உள்ளிட்டவை குறித்து அறிவித்தார்.
அந்த வகையில், சென்னை அருகே 2,000 ஏக்கர் பரப்பளவில் புதிய நகரம், பெண்களின் பெயரில் பத்திரப் பதிவு செய்தால் பதிவுக் கட்டணம் 1% குறைவு, மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மீண்டும் விண்ணப்பிக்க விரைவில் வாய்ப்பு வழங்கப்படும், தமிழ்நாட்டில் தேர்வு செய்யப்பட்ட 1,000 மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.7 ஆயிரம் நிதி வழங்கப்படும், அரசு ஊழியர்கள் தங்களின் ஈட்டிய விடுப்பில் வருடந்தோறும் 15 நாட்களை ஒப்பளிப்பு செய்து பணமாக மாற்றிக் கொள்ளலாம் என்பது போன்ற முக்கிய அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் வெளியிடப்பட்டது.
இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழக அரசின் பட்ஜெட்டைக் குறித்துச் சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால்,
— K.Annamalai (@annamalai_k) March 14, 2025
தமிழகத்தில் டாஸ்மாக் வருமானம் உயர்ந்துள்ளது.
தமிழக அரசின் கடன் உயர்ந்துள்ளது.
ஒதுக்கீடுகள் இல்லாத விளம்பர அறிவிப்புகள் உயர்ந்துள்ளது.
திமுகவுக்கு வேண்டப்பட்டவர்கள்…
இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”தமிழக அரசின் பட்ஜெட்டைக் குறித்துச் சுருக்கமாகக் கூற வேண்டும் என்றால், தமிழ்நாட்டில் டாஸ்மாக் வருமானம் உயர்ந்துள்ளது. ஆனால், அரசின் கடன் உயர்ந்துள்ளது. ஒதுக்கீடுகள் இல்லாத விளம்பர அறிவிப்புகள் உயர்ந்துள்ளது. திமுகவுக்கு வேண்டப்பட்டவர்கள் பயனடையும் திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், சாமானிய மக்களுக்கு நான்காவது ஆண்டாக, வழக்கம்போல ஏமாற்றத்தையே பரிசளித்திருக்கிறது திமுக” என்று பதிவிட்டுள்ளார்.