fbpx

அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு..? அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரபரப்பு தகவல்..!

தமிழக அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு இல்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் மருந்துகள் கையிருப்பு மற்றும் கொள்முதல் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழக அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ”மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மருத்துவமனைகளில் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு..? அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரபரப்பு தகவல்..!

மருந்தகங்களில் அவசிய மருந்துகள், சிறப்பு மருந்துகளின் கையிருப்பு குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில், அத்தியாவசிய மருந்துகள் 327 வகைகளும், சிறப்பு மருந்துகள் 301 வகைகளும் கொள்முதல் செய்யப்பட்டு 3 மாதங்களுக்கு தேவையான அளவில் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு இல்லை. மருந்துகளின் கையிருப்பு குறித்து கள ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 32 மருந்து கிடங்குகள் செயல்பட்டு வருகின்றன. புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு ரூ.30 கோடி செலவில் புதிய மருந்து கிடங்குகள் அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. இதன் மூலம் இந்தியாவில் அனைத்து மாவட்டங்களிலும் மருந்து கிடங்குகளை கொண்ட ஒரே மாநிலமாக தமிழகம் அமையும்.

அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு..? அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரபரப்பு தகவல்..!

மருத்துவமனைகளில் எதிர்பாராத வகையில், தட்டுப்பாடு ஏற்பட்டாலும் அவற்றை மருத்துவமனை நிர்வாகமே கொள்முதல் செய்ய நிதி வசதியும், நிர்வாக அனுமதியும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. ஆரம்ப சுகாதார மையங்கள், மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் ஆகிய இடங்களில் மருந்துகள் இல்லை என ஊழியர்கள் தெரிவித்தால், உடனடியாக பொதுமக்கள் 104 என்ற உதவி எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம். இதற்காக நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரிகள் புகார் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வார்கள். மேலும் எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரிக்கு மத்திய அரசின் சார்பில் மரபணு சோதனை மற்றும் ஆராய்ச்சிக்கு சிறப்பு நிலை ஆணை வழங்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு..? அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரபரப்பு தகவல்..!

தமிழகத்தில் முதல் முறையாக எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு இந்த சிறப்பு அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதன் மூலம் மரபணு நோய்களை கண்டுபிடித்தல், சிறப்பு சிகிச்சைகள், மரபணு நோய்களுடன் பிறப்புகளை தடுத்தல் மற்றும் ஆராய்ச்சிகளுக்கான மேம்பாட்டு பணிகளும் நடைபெறும். மேலும், மத்திய அரசு சார்பில் ரூ.5 கோடி மேம்பாட்டு நிதியும் மருத்துவமனைக்கு வழங்கப்படும்”. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Chella

Next Post

சூப்பர் அப்டேட்..!! 'பொன்னியின் செல்வன் பாகம் 2' எப்போது ரிலீஸ் தெரியுமா?

Sun Sep 18 , 2022
‘பொன்னியின் செல்வன் பாகம் 2′ இன்னும் 6 அல்லது 9 மாதங்களுக்குள் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் பாகம் 1 செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தற்போது படக்குழுவினர் புரொமோஷன் பணிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், பொன்னியின் செல்வன் பாகம் 2 குறித்த தகவல் வெளியாகி உள்ளது. முதல் பாகம் வெளியான பிறகு 6 அல்லது 9 மாதங்களுக்கு […]
தீபாவளி வரை திரையரங்குகளில் ’பொன்னியின் செல்வன்’ தான்..!! புதிய படங்களின் ரிலீஸ் தள்ளிவைப்பு..!!

You May Like