fbpx

கோவாவில் காங்கிரஸ் கூடாரம் காலி ஆகிறதா..? 7 எம் எல் ஏக்கள் பாஜகவுக்கு தாவல்…!

கோவாவிலும் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்களை பாஜக பக்கம் இழுப்பதற்கு தீவிரம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கோவாவில் காங்கிரஸ் கட்சியில் மொத்தம் உள்ள 11 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். அதில் ஏழு பேர் கூண்டோடு பாஜகவுக்கு தாவக் கூடும் என கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சி ஆட்சி செல்வாக்கு பெற்றிருந்த மாநிலங்களில் கோவாவும் ஒன்று. ஆனால் கோவா காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் அடுத்தடுத்து அக்கட்சியில் இருந்து வெளியேறி, பாஜக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி என பல கட்சிகளில் காங்கிரஸ் தலைகள் இணைந்தனர்.

இதனால் கோவாவில் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியானது. கோவா சட்டசபை தேர்தலுக்குப் பின்னர் அவர்களுக்கு கிடைத்த 11 எம்.எல்.ஏக்களைத் தக்க வைத்துக் கொள்வதில் காங்கிரஸ் மிகுந்த கவனம் செலுத்தியது. இதற்காக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, பதினொரு எம்.எல்.ஏக்களிடம் சத்தியம் வாங்கினார். இந்நிலையில அந்த சத்தியமும் காற்றில் பறக்கும் நிலைமை வந்துவிட்டது. கோவா காங்கிரஸில் சலசலப்புகள் எழத் தொடங்கியுள்ளன. அக்கட்சி மேலிடம் கூட்டிய கூட்டத்தை எம்.எல்.ஏக்கள் புறக்கணித்தனர். மேலும் சில எம்.எல்.ஏக்கள் பாஜகவுடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தற்போது உள்ள நிலையில் காங்கிரஸின் 11 எம்.எல்.ஏக்களில் ஏழு பேர் பாஜகவுக்கு தாவும் மனநிலையில் உள்ளதாக பனாஜி தகவல்கள் கூறுகின்றன. ஆனால் காங்கிரஸ் கட்சி இதனைஉண்மை இல்லை என்று திட்டவட்டமாக மறுத்து வருகிறது. கோவா காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் தினேஷ் குண்டுராவ், இந்த மாதிரியான தகவல்கள் திட்டமிட்ட வதந்தி என்கிறார். மேலும் கோவாவில் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் அடுத்தவாரம் தொடங்குகிறது. ஆகஸ்ட் பத்தாம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், எம்.எல்.ஏக்கள் கூண்டோடு கட்சி மாறினால் காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவு என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.

Baskar

Next Post

தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர் நியமனம் அதிகரிகப்படும்...! அமைச்சர் அன்பில் மகேஷ் சொல்லிய தகவல்

Mon Jul 11 , 2022
அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். கும்பகோணம் அருகே திப்பிராஜபுரத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில், ரூபாய் 2 கோடியே 32 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த அறிவியல், கணிணி ஆய்வு கூடங்களையும் அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘தமிழக முதலமைச்சரின் நடவடிக்கையால் அவர் மீது நம்பிக்கை கொண்டு, கடந்த […]

You May Like