’என்னுடைய திருமணம், காதல் திருமணம் என்றும் பெற்றோர் சம்மத்தோடுதான் திருமணம் செய்துகொண்டதாகவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தனியார் செய்தி தொலைக்காட்சியின் நேர்காணலில் கலந்து கொண்ட அவர், பாஜக கூட்டணியில் யார் யார் இருக்கலாம் என்ற கேள்விக்கு, ”திமுக-காங்கிரஸ் தவிர அனைவரும் எங்கள் பக்கம் தான் வரணும் என்று தெரிவித்தார். அடுத்த தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தல், அதனால் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும். சாதியில்லா சமூகத்தை திருமாவளவன் உருவாக்க வேண்டும், அப்படி மாறினால் அவரும் எங்கள் கூட்டணியில் இணைய சரியானவர்தான் என்றார்.
தமிழ்நாட்டில் ஏன் இன்னும் பாஜக ஒரு பெரிய இடத்திற்கு வரவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், இவ்வளவு நாட்களும் அண்ணாதுரை, கருணாநிதி, ஜெயலலிதா, இப்படி பெரிய ஆளுமைகள் இருந்ததால், எதுவும் செய்ய முடியவில்லை. இவர்களை எதிர்த்து யாராலும் ஆட்சி செய்யவே முடியாது என்று இருக்கும் சூழலில் பாஜக மட்டும் எப்படி மேலே வரமுடியும். அதனால் தான் வரமுடியவில்லை, ஆனால் தற்போது மக்களோடு ஒன்றிணையும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார். அதிமுக கூட்டணியா, பாஜக கூட்டணியா எது பெரிய கட்சி என்ற கேள்விக்கு, அதிமுக தான் பெரிய கட்சி, கருத்தியலில் திமுகவுக்கும் தங்களுக்கும் போட்டி வருகிறது. ஆனால், கட்சியை பொறுத்தவரை அதிமுகவே பெரிய கட்சி என தெரிவித்துள்ளார்.
ஆட்டுக்குட்டி அண்ணாமலை என்று அழைப்பதை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு, ஒருவர் ஊழல்வாதி, பெண்களிடம் தவறாக நடந்து கொள்கிறார், முதுகில் குத்துபவர் என்ற பெயர் தான் பெற கூடாது. ஆடு என்பது விவசாயம் தானே… அதனால், எனக்கு எந்த வருத்தமும் இல்லை என தெரிவித்துள்ளார். நீங்கள் சமீபத்தில் கவனிக்க கூடிய தலைவர்கள் என்றால் யார் என்ற கேள்விக்கு, சீமான், உதயநிதி ஸ்டாலின், ரவிக்குமார், அன்புமணி ராமதாஸ் இவர்களின் மாறுபட்ட கருத்துக்களை பார்ப்பேன் எனக்கு பிடிக்கும் என கூறினார். நீங்கள் காதல் திருமணமா? என்ற கேள்விக்கு ஒரே பள்ளி, கல்லூரியில்தான் படித்தோம். அதன் பிறகு கல்லூரி படிக்கும்போது காதலித்து பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டோம். love come arrange marriage. திருமணத்துக்கு பிறகு லவ்லா இல்லைங்க” என்று சிரித்துக்கொண்டே கூறினார்.