fbpx

இது ஒன்றும் ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆட்சி கிடையாது..!! திராவிட மாடல் ஆட்சி..!! பிரதமரை வம்பிழுக்கும் உதயநிதி..!!

நீங்கள் நினைக்கும் மாதிரி எடப்பாடி பழனிசாமி ஆட்சியோ, ஓ.பன்னீர்செல்வம் ஆட்சியோ கிடையாது. இது திராவிட மாடல் ஆட்சி என உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

சென்னை ஆலந்தூரில் நடைபெற்ற திராவிட மாடல் பயிற்சி பாசறைக் கூட்டத்தில் திமுக எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ”இங்கே பேசியவர்கள் சொன்னார்கள், தேர்தலில் நான் பிரச்சாரம் செய்ததால் வெற்றி பெற்றோம் என்று. மன்னிக்கவும் அதற்கு நான் காரணம் அல்ல, வெற்றிக்கெல்லாம் ஒரே காரணம் கலைஞர். கலைஞர் வழியில் வந்த நமது தலைவர். அந்த வெற்றி கண்டிப்பாக தொடரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. மோடி இங்கு வரும் போது தமிழில் பேசுவார். திருக்குறள் சொல்லுவார். ஆனால், தமிழுக்கு எதுவும் செய்யவில்லை, இந்தியை கொண்டு வந்து திணிப்பார்.

இது ஒன்றும் ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆட்சி கிடையாது..!! திராவிட மாடல் ஆட்சி..!! பிரதமரை வம்பிழுக்கும் உதயநிதி..!!

நான் மோடியிடம் சொல்ல விரும்புகிறேன். இங்கு நடந்து கொண்டிருப்பது நீங்கள் நினைக்கும் மாதிரி எடப்பாடி பழனிசாமி ஆட்சியோ, ஓ.பன்னீர்செல்வம் ஆட்சியோ கிடையாது. இது திராவிட மாடல் ஆட்சி. இது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுடைய ஆட்சி. இங்கிருந்து போய் காசியில் தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை நடத்துகிறார். தமிழ்நாட்டிற்கு இதுவரை என்ன செய்திருக்கீங்க? ஒன்னுமே செய்யல. நீங்கள் ஒவ்வொரு முறையும் எங்களது மாநில உரிமைகளை பறிக்கும் போது அதற்கு குரல் கொடுக்கிற, இந்தியாவிலேயே உங்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கின்ற தலைவர் தளபதி மட்டும்தான்”. இவ்வாறு அவர் பேசினார்.

Chella

Next Post

மீண்டும் பெண் குழந்தையா? வேண்டாம் வேண்டாம்..!! கருக்கலைப்பு செய்த பெண் பரிதாப பலி..!! அதிர்ச்சி

Mon Nov 21 , 2022
கர்ப்பிணியாக இருந்த வேப்பூர் பகுதியைச் சேர்ந்த பெண் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மருந்தகத்தில் கருக்கலைப்பு செய்ததால் தொடர் ரத்தப்போக்கு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த கீழக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கோவிந்தராஜ் (33) அமுதா (28) தம்பதியர். இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தை உள்ள நிலையில், அமுதா 4 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் அமுதா, கள்ளக்குறிச்சி மாவட்டம் அசகளத்தூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் வடிவேலன் […]
மீண்டும் பெண் குழந்தையா? வேண்டாம் வேண்டாம்..!! கருக்கலைப்பு செய்த பெண் பரிதாப பலி..!! அதிர்ச்சி

You May Like