முன்னாள் தமிழக பாஜ தலைவரும் மேற்கு வங்க ஆளுநருமான இல.கணேசனுக்கு மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
தமிழக முன்னாள் பா.ஜ. தலைவரான இலகணேசன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மேற்கு வங்கம் மற்றும்மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
மேற்கு வங்க ஆளுநர் இலகணேசன் சென்னையில் உள்ள வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து 2 நாளுக்கு முன்பு ஆஞ்சியோ செய்யப்பட்டது. இந்நிலையில் மீண்டும் இன்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவரது உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அவர் கண்காணிப்பில் உள்ளார். 2 நாட்களுக்குப் பின்னர் அவரது உடல்நிலையில் தெளிவான மாற்றம் தெரிந்தார் டிஸ்சார்ஜ் பற்றி மருத்துவர்கள் அறிவிப்பார்கள்.