பொங்கல் பரிசுத்தொகை ரூ.5000..? தமிழக மக்களுக்கு காத்திருக்கும் சர்பிரைஸ்.. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்..

stalin money

தமிழக மக்கள் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியாகக் கொண்டாடும் வகையில், மாநில அரசு சார்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக, பொங்கல் பரிசுடன் ரொக்கப் பணமும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால், 2025ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது நிதிப் பற்றாக்குறை காரணமாக ரொக்கப் பணம் தவிர்க்கப்பட்டு, பரிசுத் தொகுப்பு மட்டுமே வழங்கப்பட்டது.


இந்தச் சூழலில், அடுத்த ஆண்டு வரவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, 2026 பொங்கல் பண்டிகையின்போது மீண்டும் ரொக்கப் பணம் வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பொங்கல் பரிசுத் தொகுப்புடன், ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 முதல் ரூ.5,000 வரை ரொக்கப் பணம் வழங்கத் தமிழக அரசு ஆயத்தமாகி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.

இந்த சூழலில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்கு ரூ.5000 பரிசுத்தொகை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்..

இந்த நிலையில் இதுகுறித்து கனிம வளத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டியளித்தார்.. புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ பொங்கல் பரிசை பொறுத்தவரை இப்போதைக்கு நாங்கள் எதுவும் சொல்ல மாட்டோம்.. என்ன பரிசு கொடுக்கப் போகிறோம் என்பது கடைசி நேர ரகசியம்..” என்று தெரிவித்தார்.. இப்போது 5000 தரக்கூறும் எடப்பாடி பழனிசாமி அதிமுக ஆட்சியில் அதை கொடுக்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.. எனவே பொங்கல் பரிசுத்தொகை தொடர்பான அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது..

Read More : அதிமுகவிடம் 50 தொகுதிகள் கேட்ட பாஜக..? ஷாக் கொடுத்த இபிஎஸ்..! பரபரக்கும் தமிழக தேர்தல் களம்..!

RUPA

Next Post

திடீர் ட்விஸ்ட்! மீண்டும் அதிமுக கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி தினகரன்? க்ரீன் சிக்னல் கொடுத்த இபிஎஸ்..! அடுத்தது என்ன?

Tue Dec 23 , 2025
2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் திமுக முழு வீச்சில் தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளது.. இந்த முறை எப்படியாவது ஆட்சி அமைக்க வேண்டும் என்று அதிமுக பாஜக கூட்டணி பணிகளை தொடங்கி உள்ளது.. குறிப்பாக பாஜக திமுகவை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கில் தேர்தல் பணிகளை […]
EPS OPS TTV 2 0 1

You May Like