2023 பொங்கல் பரிசு தொகுப்பு! நாளை முதல் டோக்கன் விநியோகம்?

தமிழர் திருநாளாக போற்றப்படும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருடம் தோறும் குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு தமிழக அரசின் சார்பாக வழங்கப்பட்டு வருகிறது.


சென்ற அதிமுக ஆட்சிக்காலத்தில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் மற்றும் ரொக்க பணம் உள்ளிட்டவை ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட்டு வந்த நிலையில், சென்ற வருடம் கரும்புடன் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு தமிழக அரசு சார்பாக வழங்கப்பட்டது.

இந்த வருடம் பொங்கல் பண்டிகையை மிக சிறப்பாக கொண்டாடுவதற்காக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, இவற்றுடன் 1000 ரூபாய் ரொக்க பணம் உள்ளிட்டவை வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

எல்லா அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு இதை வழங்கப்பட உள்ளது. பொங்கல் ரொக்க பணம் தமிழகத்தில் உள்ள 33,000 ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட உள்ளது. 1000 ரூபாய் ரொக்கம் பெறுவதற்கான டோக்கன் நாளை முதல் விநியோகம் செய்யப்பட உள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது.

1000 ரூபாய் வழங்குவதை வரும் ஜனவரி மாதம் 2ம் தேதி சென்னையில் முதலமைச்சரும், மாவட்டங்களில் அந்தந்த மாவட்டத்திற்கான அமைச்சர்களும் தொடங்கி வைப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

சீனாவில் உடல்களை தகனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருக்கும் உறவினர்கள் – அதிர்ச்சி வீடியோ!

Mon Dec 26 , 2022
சீனாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2020-ம் ஆண்டின் தொடக்கத்தில் உலகெங்கும் கொரோனா தொற்று மிக வேகமாக பரவத் தொடங்கியது. இதையடுத்து உலக நாடுகள் ஊரடங்குக் கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்தன. தொற்று தீவிரம் குறைந்த பிறகு ஊரடங்குக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. ஆனால், சீனா கொரோனா பரவலை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் ஊரடங்குக் கட்டுப்பாடுகளை கடந்த இரண்டு ஆண்டுகளாக […]
ஷாக்கிங் நியூஸ்..!! இந்தியாவுக்குள் நுழைந்தது சீனாவின் புதிய வைரஸ்..!! சுகாதாரத்துறை எச்சரிக்கை..!!

You May Like