லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துக் கொண்டிருக்கும் ‘கூலி’யில் இருந்து, நடிகை பூஜா ஹெக்டே நடனமாடியுள்ள ‘மோனிகா’ பாடல் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த பாடலில் பூஜா ஹெக்டேக்கு ஜோடியாக மலையாள நடிகர் சௌபின் ஷாஹிர் நடனமாடுகிறார். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள இந்த பாட்டில் சுப்லக்ஷினி மற்றும் அனிருத் பாடியுள்ளனர்.
விஷ்ணு எடவன் எழுதிய வரிகளில் அசல் கோலார் பாடியுள்ள ராப் பகுதியும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. பாடலின் வெளியீட்டைத் தொடர்ந்து, பூஜா ஹெக்டே தனது சமூக ஊடக பக்கத்தில் ஒரு உருக்கமான பதிவை பகிர்ந்துள்ளார். “மோனிகா பாடல் என் வாழ்க்கையின் மிகவும் கடினமான பாடல்களில் ஒன்று” என தெரிவித்துள்ளார். மகாசிவராத்திரி விரதத்தில் இருந்தபோது இப்படப்பிடிப்பில் பங்கேற்றதாகவும், வெப்பம், தூசி, ஈரப்பதம் என பல சவால்களையும் கடந்து வேலை செய்தேன்.
இவைகளுக்கு மத்தியில், கிளாமராகவும் கஷ்டப்படாமலும் ஆடியாக வேண்டும். நான் என்னுடைய அனைத்து முயற்சிகளையும் மோனிகா பாடலுக்காகக் கொடுத்திருக்கிறேன். திரையில் பார்க்கும்போது நிச்சயமாக சரவெடியாக இருக்கும்.. என்னுடன் நடனமாடிய துணை நடனக் கலைஞர்கள் எனக்கு உற்சாகம் அளித்தார்கள்.
யூடியூப்பில் ஒரு கோடி 50 லட்சம் பார்வையாளர்களை கடந்து தொடர்ந்து டிரெண்டிங்கில் உள்ள நிலையில், மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘கூலி’ படம் ஆகஸ்ட் 14, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இதில் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், மற்றும் ஆமிர் கான் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். கலாநிதி மாறன் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார்.
Read more: “இரண்டு வருட ஆயுள் போய்விட்டது” கூலி படத்திற்கு ரூ.50 கோடி சம்பளம்.. மனம் திறந்த லோகேஷ் கனகராஜ்..!