சோகம்…! பிரபல நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் உடல்நல குறைவால் காலமானார்…!

srinivasan 2025

பிரபல நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் (83) உடல்நல குறைவால் காலமானார்.

பிரபல நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் (83) உடல்நல குறைவால் காலமானார். கடந்த சில காலமாகவே உடல்நல குறைவால் அவதிப்பட்ட அவர், 2023-ம் ஆண்டோடு நடிப்பதை நிறுத்தினார். கடந்த 2003-ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான படம் ‘சாமி’. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதில் ‘பெருமாள் பிச்சை’ என்ற வில்லன் கதாபாத்திரத்தில் தனது தனித்துவ நடிப்பால் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் நடிகர் கோட்டா சீனிவாச ராவ்.


தெலுங்கு நடிகரான அவருக்கு தமிழில் இது தான் முதல் படம். தொடர்ந்து அவர் தமிழில், குத்து,ஜோர், ஏய், திருப்பாச்சி, பரமசிவன், சத்யம், கோ, சாமி 2 என பல படங்களில் நடித்து தனது வில்லத்தனத்தால் பாராட்டப்பட்டவர் கோட்டா சீனிவாச ராவ். நடிகர், பாடகர், டப்பிங் கலைஞர் என பன்முக திறமை கொண்ட இவர், மொத்தம் 750 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார்.

இந்த நிலையில் அவர் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தி திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரின் மறைவுக்கு திரைத்துறை பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Read More: இன்று உலக மக்கள் தொகை தினம்!. 2030க்குள் இந்தியா அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக மாறும்!. இந்த மாநிலம்தான் முதலிடம்!.

Vignesh

Next Post

BREAKING: திருவள்ளூர் ரயிலில் பயங்கர தீ விபத்து...!

Sun Jul 13 , 2025
திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலில் பயங்கர தீ விபத்து. ஏற்படுத்தியுள்ளது. துறைமுகத்தில் இருந்து எண்ணெய் ஏற்றிக் கொண்டு புறப்பட்ட சரக்கு ரயிலில் திடீரென தீப்பிடித்தது. இதனால் இரு வழித்தடத்திலும் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். சென்னை அடுத்த திருவள்ளூர் அருகே சரக்கு தடம் புரண்டதால் ரயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்த ரயில் பெட்டிகளில் தீ பற்றியது. இதன் […]
train 2025

You May Like