ஆலந்தூர், மடிப்பாக்கம், திருவான்மியூர்,பல்லாவரம், போரூர், தாம்பரம்,ஆவடியில் இன்று மின் நிறுத்தம். இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்புப் பணி காரணமாக மின் நிறுத்தம்.
சென்னையில் இன்று மின்பாதை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஆலந்தூர், மடிப்பாக்கம், திருவான்மியூர், பல்லாவரம், போரூர், தாம்பரம்,ஆவடியில் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு மின்நிறுத்தம் செய்யப்படும்.
திருவான்மியூர், பல்லாவரம் மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பராமரிப்பு பணிகள் காரணமாக மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக, பல முக்கிய குடியிருப்புப் பகுதிகளும் தொழில்துறை வளாகங்களும் பாதிக்கப்படும். முக்கிய பகுதிகள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை ஏற்படும். இவை பெரும்பாலும் சாலைகளும், வீடுகளும் அடர்த்தியாகக் காணப்படும் இடங்கள் என்பதால் பொதுமக்கள் முன்கூட்டியே திட்டமிடுவது அவசியம்.
இந்த பகுதிகளில் பள்ளிகள், வணிக நிறுவனங்கள் அதிகம் உள்ளதால் முன்னெச்சரிக்கையாக ஏற்பாடுகள் செய்ய வேண்டும். பராமரிப்பு காலம் என்பதால் குடிநீர் சேமிப்பு, செல்போன் சார்ஜிங், மற்றும் அவசியமான வேலைகளை முன்கூட்டியே செய்து வைத்துக் கொள்ள வேண்டிய அவசியமாகிறது.
Read more: யாருகிட்ட.. அடி மடியிலேயே கை வைத்த ஈரான்.. பதறும் உலக நாடுகள்.. இந்தியாவுக்கும் ஆபத்து..