மத்திய அரசு சூப்பர் சான்ஸ்…! ரூ.3000 பென்ஷன் தரும் பிரதான் மந்திரி ஷரம் யோகி மந்தன் திட்டம்..! யார் யார் தகுதி…?

money Central govt modi 2025

பிரதமரின் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் பதிவு செய்யப்பட்ட அமைப்புசாரா துறை தொழிலாளர்களுக்கு அவர்களின் வயதான காலத்தில் மாதாந்திர ஓய்வூதியத்தை உறுதி செய்வதாக உள்ளது. முறைசாரா துறையில் ஈடுபட்டுள்ள கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்கு இதுபோன்ற ஒரு திட்டம் அறிமுகப்படுத்தப்படுவது சுதந்திரத்திற்குப் பிறகு இதுவே முதல் முறையாகும்.


பிரதமரின் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டம், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பை வழங்குவதற்காக மத்திய அரசால் தொடங்கப்பட்ட ஒரு தன்னார்வ மற்றும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டமாகும். இந்தத் திட்டம் அமைப்புசாரா துறையைச் சேர்ந்த மற்றும் மாத வருமானம் ரூ. 15,000 வரை உள்ள தொழிலாளர்களுக்கு 60 வயதிற்குப் பிறகு குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியத்தை உறுதி செய்கிறது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 50 சதவீத பங்களிப்பை வழங்கும் அமைப்புசாரா துறைகளில் உள்ள தொழிலாளர்களுக்கு இந்த திட்டம் உறுதி செய்கிறது.

யாரெல்லாம் தகுதி

வீட்டிலிருந்து வேலை செய்யும் தொழிலாளர்கள், தெருவோர வியாபாரிகள், மதிய உணவு பணியாளர்கள், தலைச் சுமை தூக்குபவர்கள், செங்கல் சூளை தொழிலாளர்கள், செருப்பு தைப்பவர்கள், குப்பை பொறுக்குபவர்கள், வீட்டுப் பணியாளர்கள், சலவைத் தொழிலாளர்கள், ரிக்ஷா இழுப்பவர்கள், நிலமற்ற தொழிலாளர்கள், வேளாண் தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், பீடித் தொழிலாளர்கள், கைத்தறித் தொழிலாளர்கள், தோல் தொழிலாளர்கள், ஒலி-ஒளி தொழிலாளர்கள் அல்லது இது போன்ற பிற தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களாவர். இ-ஷ்ரம் தளத்தின் படி, 2024 டிசம்பர் 31 நிலவரப்படி 30.51 கோடிக்கும் அதிகமான அமைப்புசாரா தொழிலாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த திட்டத்தில் தனிநபர்கள், மாதம் வெறும் ரூ.55 செலுத்தி வந்தாலே, வயதான காலத்தில் ரூ.3 ஆயிரம் பென்ஷனை பெறலாம்… பயனாளிகள் ரூ.200 மாதம் செலுத்தினால் அரசும் பென்ஷன் ஃபண்டில் ரூ.200 செலுத்தும்… மேலும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் ஓய்வு பெறும் போது 30 லட்சம் ரூபாய் வரையிலான கிராஜூவிட்டி தொகைக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

வெறும் வயிற்றில் டீ குடிக்கிறீர்களா?. ஒரு நாளைக்கு 2 முறைக்கு மேல் குடிச்சா இவ்வளவு ஆபத்தா?. தெரிஞ்சுக்கோங்க!.

Sun Aug 3 , 2025
காலையில் எழுந்தவுடன் வாய் கொப்பளித்த அடுத்த நொடியில் டீ குடிக்கும் பழக்கம் நம்மில் பலரிடம் இருக்கிறது. இந்த பழக்கம் கடந்த 20 ஆண்டுகளாகவே எல்லோரது வீடுகளிலும் பரவி விட்டது. காலையில் எழுந்ததும் ஒரு டீ காபி, அதில் தொட்டு சாப்பிட ஒரு பண் அல்லது பிஸ்கட் என்பது வாழ்க்கை நடைமுறையாகிவிட்டது. ஆனால் காலையில் வெறும் வயிற்றில் டீ குடிக்கலாமா? என்றால் எல்லோருக்கும் அது நல்லதல்ல. சிலருக்கு டீ காலையில் வெறும் […]
tea

You May Like