இன்று முதல் Paracetamol உள்ளிட்ட மாத்திரைகளின் விலை உயர்வு..!! பொதுமக்கள் அதிர்ச்சி..!!

ஆன்டிபயாடிக், பெயின்கில்லர் போன்ற அத்தியாவசிய மருந்துகளின் விலை, இன்று முதல் உயரும் என என்.பி.பி.ஏ. தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது. மொத்த விலை குறியீட்டின் ஆண்டு மாற்றத்திற்கு ஏற்ப, தேசிய பட்டியலின் கீழுள்ள அத்தியாவசிய மருந்துகளுக்கு, 0.0055 சதவீதம் விலை மாற்றம் செய்யப்படும் என ஆணையம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, பாராசிட்டாமல், அசித்ரோமைசின், வைட்டமின், மினரல்ஸ் உள்ளிட்ட 800-க்கும் மேற்பட்ட மருந்துகள், இந்த புதிய விலையின் கீழ் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மருந்துகளின் விலை கடந்தாண்டு 12 சதவீதமும், அதற்கு முந்தைய ஆண்டு 10 சதவீதமும் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து தேசிய மருந்து விலை நிர்ணய ஆணைய வட்டாரங்கள் கூறுகையில், ”பொதுவாக மக்கள் பயன்படுத்தும் வலி நிவாரணி, நுண்ணுயிர் எதிர்ப்பிகள், தொற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள் என 800 அத்தியாவசிய மருந்துகளின் விலையை ஏப்ரல் 1ஆம் தேதி முதல் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மொத்த விற்பனை விலைக் குறியீட்டின் வருடாந்திர மாற்றத்திற்கு ஏற்ப, அத்தியாவசிய மருந்துகளின் தேசியப் பட்டியலின் கீழ், அத்தியாவசிய மருந்துகளின் விலையை 0.0055% அதிகரிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது” என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Read More : Tollgate: தமிழ்நாடு முழுவதும் இன்றுமுதல் அமல்!… அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம்!

Chella

Next Post

Income tax: நாடுமுழுவதும் இன்றுமுதல் அமல்!… 2024-25 ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி மாற்றங்கள்!… முழுவிவரம்!

Mon Apr 1 , 2024
Income tax: 2024-25 ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி மாற்றங்கள் இன்று முதல் அமலுக்கு வருகிறது. என்னென்ன மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன என்பதை விரிவாக பார்க்கலாம். வருமான வரி மாற்றங்கள் என்பது ஒவ்வொரு மாத சம்பளக்காரர்களுக்கும் மிகவும் முக்கியமானது, வருடத்தின் ஆரம்பத்திலேயே ஒருவருடைய வருமானத்தை கணக்கிட்டு வரி சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்வது அவசியம், இல்லையெனில் வருடத்தின் இறுதியில் தேவையில்லாத டென்ஷன், வரிக்காக பணத்தை இழக்க நேரிடும். இந்த நிலையில் […]

You May Like