நடிகர் ரஜினிகாந்த் திரையுலகிற்கு அறிமுகமாகி 50 ஆண்டுகள் நிறைவு செய்ததற்கு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய திரையுலகின் முன்னணி நடிகராக வளம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் நேற்றைய தினம் “கூலி” படம் வெளியாகி தரையரங்குகளில் சக்கை போடு போட்டு வருகிறது. இந்த படம் முதல் நாளில் ரூ.151 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. பல வருடங்களை ரசிகர்களை கவரும் நடிகராக ரஜினிகாந்த் வளம் வருகிறார்.
நடிகர் ரஜினி திரையுலகிற்கு அறிமுகமாகி 50 ஆண்டுகள் ஆனதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து ரஜினி காந்த இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் அந்த அறிக்கையில் “அனைவருக்கும் 79-வது சுதந்திர தின நல்வாழ்த்துகள்.
எனது 50 ஆண்டு கால திரையுலகப் பயணத்தை ஒட்டி என்னை மனமார வாழ்த்திய என் நண்பரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பாரதிய ஜனதா கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன், நண்பர் அண்ணாமலை, சசிகலா அம்மையார், தினகரன், பிரேமலதா அம்மையார் மற்றும் பல அரசியல் நண்பர்களுக்கும், கமல்ஹாசன், மம்மூட்டி, மோகன்லால், வைரமுத்து, இளையராஜா உள்ளிட்ட அனைத்து திரையுலக நண்பர்களுக்கும் என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று ரஜினி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் திரையுலகிற்கு அறிமுகமாகி 50 ஆண்டுகள் நிறைவு செய்த ரஜினிகாந்திற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடியின் பதிவு, “சினிமா உலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு வாழ்த்துக்கள். அவரது பயணம் ஒரு சிறப்புமிக்க அனுபவம், அவரது மாறுபட்ட வேடங்கள் தலைமுறை தலைமுறையாக மக்களின் மனதில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. வரும் காலங்களில் அவர் தொடர்ந்து வெற்றி பெற்று நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
Read More: அடுத்த ஆண்டு கமலாலயம் இல்ல.. சென்னை கோட்டை தான் நம்ம டார்கெட்..!! – நயினார் நாகேந்திரன் பேட்டி..