இந்திரா காந்தியின் சாதனையை முறியடித்த பிரதமர் மோடி!. நாட்டின் நீண்ட காலம் பிரதமராக பதவி வகித்த பெருமையை பெற்றார்!.

pm indra gandhi modi 11zon

இந்திய பிரதமராக தொடர்ச்சியாக அதிக நாட்கள் பணியாற்றியவர்களில், இந்திரா காந்தியின் சாதனையை முறியடித்து நரேந்திர மோடி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.


மூன்று பதவிக் காலங்களாக பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்று இன்றுடன் 4,078 நாட்கள் நிறைவடைகிறது. அதனடிப்படையில் இந்திய பிரதமராக தொடர்ச்சியாக அதிக நாட்கள் பணியாற்றியவர்களில், இந்திரா காந்தியின் சாதனையை முறியடித்து நரேந்திர மோடி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். அதாவது, மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1964 முதல் 1977 வரை தொடர்ச்சியாக பிரதமராக பதவி வகித்தார்.

இருப்பினும், இந்தியாவின் முதல் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேருவே, (1947–1964) இதுவரை அதிக நாட்கள் தொடர்ச்சியாக பதவியில் இருந்தவர் ஆவர். 74 வயதான மோடி, கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றார், இவர் முதன்முறையாக, 2014ம் ஆண்டு மே 26ம் தேதி பிரதமராக பதவியேற்றார். எனவே, காங்கிரஸ் அல்லாத கட்சியில் இருந்து நீண்ட காலம் பிரதமராகப் பதவி வகித்த பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தலைவர் என்ற பெருமையையும் மோடியையே சேரும்.

இந்திரா காந்தி ஜனவரி 14, 1980 முதல் அக்டோபர் 31, 1984 அன்று படுகொலை செய்யப்படும் வரை பிரதமராகவும் பணியாற்றினார். அவரது தந்தை ஜவஹர்லால் நேரு, ஆகஸ்ட் 15, 1947 முதல் மே 27, 1964 வரை 16 ஆண்டுகள் 286 நாட்கள் பதவியில் இருந்ததால், இந்தியாவின் மிக நீண்ட காலம் பிரதமராகப் பணியாற்றியவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

பிரதமராவதற்கு முன்பு, 2001 முதல் 2014 வரை குஜராத்தின் மிக நீண்ட காலம் முதல்வராக மோடி பதவி வகித்தார். “பிரதமராக குறைந்தது இரண்டு முழு பதவிக்காலங்களை நிறைவு செய்து, மூன்றாவது முறை மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மற்றும் ஒரே காங்கிரஸ் அல்லாத பிரதமர் இவர்தான். மக்களவைத் தேர்தலில் தனித்து பெரும்பான்மை பெற்ற முதல் மற்றும் ஒரே காங்கிரஸ் அல்லாத தலைவர் இவர்தான்” .

2014 ஆம் ஆண்டில், பாஜக 272 இடங்களைப் பெற்று மத்தியில் ஆட்சியைப் பிடித்தது, பிரதமராக மோடி பதவியேற்றார். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, கட்சி தனது எண்ணிக்கையை மேம்படுத்தி, 543 மக்களவை இடங்களில் 303 இடங்களை வென்றது. 2024 ஆம் ஆண்டில் பாஜக பெரும்பான்மையை எட்ட தவறிய போதிலும், அது தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து, NDA கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்தது.

“இந்திரா காந்திக்குப் பிறகு (1971 இல்) பெரும்பான்மையுடன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பிரதமர், ஜவஹர்லால் நேருவைத் தவிர, ஒரு கட்சியின் தலைவராக தொடர்ச்சியாக மூன்று தேர்தல்களில் வெற்றி பெற்ற ஒரே பிரதமர் மோடிதான்” என்பது குறிப்பிடத்தக்கது.

Readmore: நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் 5ஜி சேவை…! மத்திய அரசு சூப்பர் தகவல்…!

KOKILA

Next Post

சொத்து ஆவணங்கள் மாயம்.. அலட்சியமாக செயல்பட்ட தாசில்தார் அலுவலகம்..!! - மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Fri Jul 25 , 2025
Property documents missing.. Tahsildar's office acted negligently..!! - Madurai High Court orders
land registry new rules 11zon

You May Like