திருச்சி பஞ்சப்பூரில் இன்று என்.டி.ஏ கூட்டணியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார்.. மேலும் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன், அன்புமணி ராமதாஸ், உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்..
இந்த கூட்டத்தில் பேசிய டிடிவி தினகரன் “ பிரதமர் டெல்லியில் இருந்து தான் ஆட்சி செய்ய முடியும் என முதல்வருக்கு தெரியாதா? டெல்லியில் இருந்து ஆட்சி செய்தாலும் அனைவருக்குமான ஆட்சியை நடத்தி வருபவர் பிரதமர் மோடி. பிரதமரின் குஜராத் மாநிலத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் உள்ள உறவு என்பது தொப்புள் கொடி உறவு.
குஜராத்தில் 5000 ஆண்டுகளுக்கு முன்பு துவாரகையை ஆண்டவர்கள் தமிழ்நாட்டு வேளிர் மன்னர்கள். வேளரிகள் ஆண்ட குஜராத்தில் இருந்து திமுக ஆட்சியை வீழ்த்துவதற்கு பிரதமர் மோடி வந்துள்ளார். மக்களை ஏமாற்றும் தீய சக்தி திமுகவை வீழ்த்தி அம்மாவின் ஆட்சி அமைய அனைவரும் உறுதியேற்போம்..” என்று தெரிவித்தார்.



