தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை ஏற்கனவே தொடங்கி விட்டன.. ஆளுங்கட்சியான திமுக கூட்டணியில் எந்த மாற்றமும் இன்றி அதே கூட்டணி நீடிக்கிறது.. எனினும் காங்கிரஸ் கட்சி விஜய்யின் தவெக உடன் பேச்சுவார்த்தை நடத்துதாக கூறப்படுகிறது.. எனவே காங்கிரஸ் மட்டும் திமுக கூட்டணியில் இருந்து வெளியேற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது..
மறுபுறம் அதிமுக பாஜக கூட்டணியில அன்புமணியின் பாமக, அமமுக ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன.. இந்த கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.. நாம் தமிழர் தனித்தே போட்டியிட உள்ளது.. புதிதாக களமிறங்கி உள்ள தவெகவுடன் எந்த கட்சிகளும் இதுவரை கூட்டணிக்கு செல்லவில்லை.. எனவே இந்த முறை தமிழ்நாட்டின் தேர்தல் களத்தில் 4 முனை போட்டி நிலவுகிறது..
இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வருகிறார்.. சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தேசிய ஜனநாயக கூட்டணியின் மாபெரும் பொதுக்கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.. இந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் மோடி அதில் உரையாற்ற உள்ளார்.
கேரளாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்திலிருந்து பிற்பகல் 2:15 மணிக்கு ஒரு சிறப்பு விமானத்தில் புறப்பட்டு சென்னை பழைய விமான நிலையத்தில் பிரதமர் மோடி தரையிறங்குவார். பின்னர், அவர் பிற்பகல் 2:50 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் மதுராந்தகத்தில் பிரத்யேகமாகத் தயார் செய்யப்பட்ட ஹெலிபேடை அடைவார். மோடி பிற்பகல் 3:00 மணி முதல் 4:15 மணி வரை பொதுக்கூட்டத்தில் உரையாற்ற உள்ளார். அதன் பிறகு, அவர் மாலை 5:00 மணிக்குள் சென்னை விமான நிலையம் திரும்பி, சிறப்பு விமானம் மூலம் டெல்லிக்கு புறப்படுவார்.
பிரதமர் வருகையை ஒட்டி செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சிறப்புப் பாதுகாப்புப் படையின் (SPG) கூடுதல் இயக்குநர் அமித் சந்த் யாதவ் தலைமையிலான குழு, விமான நிலையம், ஹெலிபேட் மற்றும் பொதுக்கூட்ட நடைபெறும் இடம் ஆகியவற்றை முன்கூட்டியே ஆய்வு செய்துள்ளது. ஜனவரி 21 முதல் 23 வரை மூன்று நாட்களுக்கு மாவட்டத்தில் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள மீனம்பாக்கம் மற்றும் கிண்டி பகுதிகள் ‘சிவப்பு மண்டலமாக’ அறிவிக்கப்பட்டு, ஹீலியம் பலூன்கள் உட்பட அனைத்து ஆளில்லா பறக்கும் சாதனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி பங்கேற்கும் இந்த பொதுக்கூட்டத்தில் நயினார் நாகேந்திரன், எல். முருகன், அன்புமணி ராமதாஸ், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பேச உள்ளனர்.. இறுதியாக பிரதமர் மோடி உரையாற்றுகிறார்..
Read More : “மகத்தான வெற்றி பெறுவோம். விசில் போடுவோம்..” இறைவன் அளித்த பரிசு என விஜய் மகிழ்ச்சி..!



