கோவை மாவட்டம் நீலாம்பூர் பகுதியில் இன்று ஏற்பட்ட சாலை விபத்தில் தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.. இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்..
கோவை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று நீலாம்பூர் பகுதியில் சென்று கொண்டிருந்தது.. நீலாம்பூர் அருகே சென்ற போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, பேருந்து சாலையோரத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்தின் தாக்கதால் பேருந்தின் கண்ணாடிகள் உடைந்து சிதறியது.. உள்ளே இருந்து அலறியடித்துக் கொண்டு தப்பிக்க முயன்றனர். விபத்து குறித்து தகவல் அறிந்து அருகில் இருந்த பொதுமக்கள் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீயணைப்பு மற்றும் மீட்புப் படைய்னர் பேருந்திற்குள் சிக்கிய பயணிகளை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்..
இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.. சிலருக்கு பலத்த காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்..
விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.. பின்னர் போலீசார் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இணைந்து பேருந்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
Read More : Breaking : மேகதாதுவில் அணை கட்டக்கூடாது.. முதல்வர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது..!



