பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி, நாடு முழுவதும் 1500 அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த அப்ரண்டிஸ் பணியிடங்களில், அதிகபட்சமாக தமிழ்நாடு மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களுக்கு தலா 277 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன; மேலும் மேற்கு வங்கத்திற்கு 152, ஆந்திராவிற்கு 62, பீகாருக்கு 76, மகாராஷ்டிராவிற்கு 68, மத்தியப் பிரதேசத்திற்கு 59, பஞ்சாபிற்கு 54, ஒடிசாவிற்கு 50, கேரளாவிற்கு 44, கர்நாடகாவிற்கு 42, தெலுங்கானாவிற்கு 42 இடங்களும் உள்ளன.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 01.07.2025 அன்று நிலவரப்படி 20 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது? இந்தியன் வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான indianbank.in ஐப் பார்வையிட்டு விவரங்களை அறிந்துகொண்டு உடனே விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ. 800/- மற்றும் SC / ST பிரிவினருக்கு ரூ. 175/- ஆகும். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகஸ்ட் 7, 2025.
தேர்வு முறை ஆன்லைன் தேர்வு மற்றும் மாநில மொழித் தேர்வு மூலம் நடைபெறும். தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், வேலூர், திருநெல்வேலி, தஞ்சாவூர், விருதுநகர் ஆகிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும். தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
Read more: விஜயகாந்த் சார் மட்டும் இல்லைன்னா என் கல்யாணம் நடந்திருக்காது..!! – பிரபல நடிகர் உருக்கம்