தொலைத்தொடர்பு சேவைகள் இணைப்பு சார்ந்த வரைவு விதிமுறைகளை 2025 இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது.
இது குறித்து தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தொலைத்தொடர்பு (ஒலிபரப்பு மற்றும் கேபிள்) சேவைகள் இணைப்பு சார்ந்த வரைவு விதிமுறைகள் 2025 இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தொலைத்தொடர்பு சேவையாளர்கள் அளித்த ஆலோசனை அடிப்படையில் தொலைத்தொடர்பு சேவைகள் விதிமுறைகள் 2017 வரைவு திருத்தம் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்புடைய அனைத்து தொலைத்தொடர்பு சேவையாளர்களின் கருத்துகளை அறிந்து கொள்வதை இந்த வரைவு ஒழுங்குமுறை விதிகள் நோக்கமாகக் கொண்டுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை www.trai.gov.in என்ற இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். இதுகுறித்து எழுத்து மூலமான கருத்துகள் 6.10.2025-க்குள் வரவேற்கப்படுகிறது.



