தமிழகத்தில் தற்போதைய 16-வது சட்டசபையின் பதவிக்காலம் நடந்து வருகிறது, இது இந்த வருடம் மே 10-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதே போல் புதுச்சேரி சட்டசபையின் பதவிக்காலம் ஜூன் மாதம் 15-ம் தேதியும், அசாம் மாநில சட்டசபை மே 20- ம் தேதியும், மேற்கு வங்காள மாநில சட்டசபையின் பதவிக்காலம் மே 7-ம் தேதியும், கேரள சட்டசபை மே 23-ம் தேதியும் முடிவடைகிறது. இதன் காரணமாக அசாம், மேற்கு வங்கம், கேரளா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, ஆகிய 5 மாநிலங்களிலும் இந்த வருடம் சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்திய தேர்தல் ஆனையம் சமீபத்தில் 5 மாநில தேர்தல் தேதிகளை அறிவித்தது..
அந்த வகையில் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 9-ம் தேதி நடைபெறுகிறது.. புதுச்சேரியில் தேர்தல் தேதி நெருங்குவதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.. புதுவையில் என்.டி.ஏ கூட்டணியில் என்.ஆர் காங்கிரஸ் – 16, பாஜக – 10, அதிமுக – 2, லட்சிய ஜனநாயக கட்சி – 2 தொகுதிகளில் போட்டியிடுகிறது..
புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான 9 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.. முதல்கட்டமாக 9 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது..
பாஜக வேட்பாளர் பட்டியல்
மண்ணாடிப்பட்டு – நமச்சிவாயம்
ஊசுடு – தீப்பாய்ந்தான்
காலாப்பட்டு – கல்யாண் சுந்தரம்,
ராஜ்பவன் – ராமலிங்கம்
முதலியார்பேட்டி – ஜான்குமார்
மணவெளி – செல்வம்,
திருநள்ளாறு – ராஜசேகரன்
நிரவி – மீனாட்சி சுந்தரம்
மாஹே- திணேசன்
Read More : தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலை நிறுத்தி வைக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு..! பரபரக்கும் அரசியல் களம்..!



