புதுச்சேரி அரசில் 484 காலிப்பணியிடங்கள்.. 10, 12, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!! செம சான்ஸ்..

job

புதுச்சேரியில் வசிக்கும் வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களுக்கு அரசு சார்பில் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.


அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை ஒரே கட்டமாக நிரப்புவதற்காக, ஒங்கிணைந்த பட்டப்படிப்பு தகுதி தேர்வு (CGL), ஒங்கிணைந்த 12-ம் வகுப்பு தகுதி தேர்வு (CHSL) மற்றும் ஒங்கிணைந்த 10-ம் வகுப்பு தகுதி தேர்வு (CSL) ஆகிய மூன்று தேர்வுகளுக்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வுகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளதுடன், மொத்தமாக 484 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

CGL தேர்வு மூலம் 327 பணியிடங்கள்: ஒங்கிணைந்த பட்டப்படிப்பு தகுதி தேர்வு (CGL) மூலம் 327 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. நிரப்பப்படும் பணியிடங்கள்..

  • புள்ளியியல் ஆய்வாளர்
  • நூலகம் மற்றும் தகவல் உதவியாளர்
  • விவசாய அதிகாரி
  • தொழில்நுட்ப அதிகாரி
  • விவசாய அதிகாரி (பொறியியல்)
  • விவசாய அதிகாரி (நீர்வளவியல்)
  • உயர்நிலை எழுத்தர்
  • கள மேற்பார்வையாளர்

இந்த பணியிடங்களுக்கான வகுப்பு வாரியான இடஒதுக்கீடு:

  • பொதுப் பிரிவு – 142
  • எம்பிசி – 57
  • எஸ்சி – 52
  • ஒபிசி – 32
  • பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் (EWS) – 31

வயது வரம்பு: இப்பணியிடங்களுக்கு அதிகபடியான வயது வரம்பு என்பது 30 – 32 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இட ஒதுக்கீட்டிற்கு ஏற்ப வயது வரம்பில் தளர்வு உள்ளது.

கல்வித்தகுதி: இத்தேர்விற்கு பொருளாதாரம், புள்ளியியல், கணிதம், வேளாண், தோட்டக்கலை, மெக்கானிக்கல், சிவில், புவியியல் ஆகியவற்றில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், தொழிற்சாலை, உற்பத்தி, வேதியியல், எலெக்ட்ரிக்கல், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், ஜவுளி ஆகியவற்றில் டிப்ளமோ முடித்தவர்கள் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

புதுச்சேரி CHSL தேர்வு 2025: CHSL கீழ் கலை மற்றும் கலாச்சார துறையின் கலைஞர் – 1 மற்றும் கீழ்நிலை எழுத்தர் – 129 என மொத்தம் 130 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

வயது வரம்பு: இப்பணியிடங்களுக்கு அதிகபடியாக 30 வயது வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி: கலைஞர் பதவிக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சியுடன் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். கீழ்நிலை எழுத்தர் பதவிக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சியுடன் தட்டச்சு தகுதி பெற்றிருக்க வேண்டும்.

புதுச்சேரி CSL தேர்வு 2025: CSL கீழ் கலை மற்றும் கலாசாரத்துறையில் உள்ள ஜூனியர் நூலகர் மற்றும் கேலரி உதவியாளர் பதவிகள் நிரப்பப்படுகிறது. நூலகர் பதவிக்கு 26 பணியிடங்கள் மற்றும் கேலரி உதவியாளர் பதவிக்கு 1 பணியிடம் என மொத்தம் 27 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

தகுதி: இத்தேர்விற்கு அதிகபடியாக 30 வயது வரை இருக்கலாம். கல்வித்தகுதியான 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

எப்படி விண்ணப்பிப்பது? ஆர்வமுள்ளவர்கள் https://recruitment.py.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும். புதுச்சேரியை சேர்ந்தவர்கள் அல்லது புதுச்சேரியில் 5 வருடங்களாக வசிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.12.2025 பிற்பகல் 3 மணி வரை.

Read more: 5 நாட்கள் பெண்கள் ஆடை அணியவே கூடாது.. இந்தியாவின் வினோத கிராமம்..! பின்னணி இதோ..

English Summary

Puducherry Government has 484 vacancies.. 10th, 12th degree graduates can apply..!

Next Post

மாதம் ரூ.30,000 வரை சம்பளம்..!! 8ஆம் வகுப்பு படித்திருந்தால் கூட போதும்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Mon Dec 1 , 2025
தமிழ்நாடு அரசு பல்வேறு துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்பி வரும் நிலையில், தற்போது திருப்பூர் மாவட்டத்தில் தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் சுகாதாரத் துறையில் உள்ள 19 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள நபர்கள் டிசம்பர் 12ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்பச் சுகாதார நிலையங்கள், மாவட்டச் சுகாதார அலுவலகம், திருப்பூர் அரசு மருத்துவக் […]
tn govt jobs 1

You May Like