புதுச்சேரி, காரைக்காலில் காவல்துறை அனுமதியுடன் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம்..!!

காந்தி ஜெயந்தி தினமான இன்று புதுச்சேரியிலும் காரைக்காலிலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பேரணி நடத்த, அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.


புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த காவல்துறை அனுமதி அளித்துள்ளது. அதன்படி காமராஜர் சிலையில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு கடலூர் சாலை சிங்காரவேலு சிலைக்கு சென்றடையும். இதேபோல காரைக்கால் மாவட்டத்தில் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் புறப்பட்டு கடற்கரை சாலையை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடற்கரை சாலையில் உள்ள சிங்காரவேலு சிலை அருகே ஆர்.எஸ். எஸ் அமைப்பின் பொதுக்கூட்டமும் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி, காரைக்காலில் காவல்துறை அனுமதியுடன் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம்..!!

புதுச்சேரியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இன்று பேரணி நடத்தும் நிலையில், சமூக நல்லிணக்கத்தை நிலைநாட்டுவதற்காக மனிதச்சங்கிலிப் போராட்டம் நடத்தப்படும் என மதச்சார்பற்ற கூட்டணியினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். காந்தி ஜெயந்தி தினமான இன்று புதுச்சேரியிலும் காரைக்காலிலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பேரணி நடத்த, அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.

CHELLA

Next Post

5ஜி சேவையைத் தரும் முதல் நிறுவனம்..!! சேவையை தொடங்கியது ஏர்டெல் நிறுவனம்..!!

Sun Oct 2 , 2022
சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட 8 நகரங்களில் 5ஜி தொலைத்தொடர்பு சேவையை ஏர்டெல் தொடங்கியதன் மூலம், நாட்டிலேயே 5ஜி சேவையைத் தரும் முதல் நிறுவனம் என்ற பெயரை ஏர்டெல் நிறுவனம் பெற்றுள்ளது. நாட்டின் பிற பெரு நகரங்களில் அடுத்தாண்டு மார்ச் முதல் 5ஜி வழங்கப்படும் என்றும், 2024ஆம் ஆண்டு மார்ச் முதல் நாடு முழுவதும் 5ஜி சேவை விரிவுப்படுத்தப்படும் என்றும் ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல் தெரிவித்துள்ளார். தற்போது […]
Airtel

You May Like