ரூ.85,920 சம்பளம்.. டிகிரி போதும்.. பஞ்சாப் தேசிய வங்கியில் வேலை வாய்ப்பு..! உடனே அப்ளை பண்ணுங்க..!!

bank job 1

பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB), 2025ஆம் ஆண்டுக்கான உள்ளூர் வங்கி அதிகாரி (Local Bank Officer) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 750 காலிப்பணியிடங்களுக்கு நாடு முழுவதும் ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது.


தமிழ்நாட்டில் எத்தனை பணியிடங்கள்? தமிழ்நாட்டிற்காக மட்டும் 85 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில்:

  • எஸ்சி – 12
  • எஸ்டி – 6
  • ஒபிசி – 22
  • EWS – 8
  • பொது – 37
  • மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 01.07.2025 தேதியின் அடிப்படையில் குறைந்தபட்சம் 20 வயது மற்றும் அதிகபட்சம் 30 வயது வரை இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி இடஒதுக்கீட்டு பிரிவுகளுக்கு வயது சலுகை வழங்கப்படும்.

சம்பளம்: ரூ.48,480 – ரூ.85,920

கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு (Degree) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதற்கான மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் டிகிரி சான்றிதழ் அவசியம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

மொழித் திறன்; அந்தந்த மாநிலத்தின் உள்ளூர் மொழியை பேச, எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள பணியிடங்களுக்கு தமிழ் மொழி அறிவு கட்டாயம்.

அனுபவம்: விண்ணப்பதாரர்கள் குறைந்தது ஒரு வருடம் தொடர்புடைய துறையில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இந்த அனுபவம் மற்றும் கல்வித் தகுதி 23.11.2025 தேதியின்படி இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB)-யின் உள்ளூர் வங்கி அதிகாரி (Local Bank Officer) பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு நான்கு கட்டத் தேர்வு முறை பின்பற்றப்படும்.

எழுத்துத் தேர்வு:

  • மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு நடைபெறும்.
  • Negative Marking உண்டு.
  • எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே அடுத்த கட்டங்களுக்கு அழைக்கப்படுவார்கள்.

சான்றிதழ் சரிபார்ப்பு:

  • எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் கல்வித் தகுதி, வயது, அனுபவம் உள்ளிட்ட ஆவணங்கள் சரிபார்க்கப்படும்.

உள்ளூர் மொழி தகுதித் தேர்வு:

  • அந்தந்த மாநிலத்தின் மொழியில் பேச, எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
  • ஆனால், 10 அல்லது 12ஆம் வகுப்பில் தமிழ் மொழியை ஒரு பாடமாகப் படித்தவர்கள், இந்தத் தேர்வில் இருந்து விலக்கு பெறுவார்கள்.

நேர்காணல் (Interview):

  • 50 மதிப்பெண்களுக்கு நேர்காணல் நடைபெறும்.
  • இதில் தேர்ச்சி பெற்றவர்களின் இறுதி தேர்வு பட்டியல் வெளியிடப்படும்.

எப்படி விண்ணப்பிப்பது? பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) வெளியிட்டுள்ள உள்ளூர் வங்கி அதிகாரி (Local Bank Officer) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதார்கள் நேரடியாக https://pnb.bank.in/ என்ற வங்கியின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் சென்று, ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் 23.11.2025.

Read more: வரலாறு படைத்த ஜோஹ்ரான் மம்தானி..! நியூயார்க் நகர மேயர் தேர்தலில் வெற்றி பெற்ற முதல் முஸ்லிம்..!

English Summary

Punjab National Bank (PNB) has issued a recruitment notification for the posts of Local Bank Officer.

Next Post

HBD Virat Kohli|‘கிரிக்கெட் கிங்’ விராட் கோலியின் பிறந்தநாள்!. மறக்க முடியாத தனித்துவ சாதனைகள் இதோ!

Wed Nov 5 , 2025
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலிக்கு 37 வயது. தற்போது, ​​அவர் உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர். இருப்பினும், அவர் இப்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடுகிறார். அவரது பிறந்தநாளில், அவரது ஐந்து வரலாற்று இன்னிங்ஸ்களைப் பார்ப்போம். இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு இன்று 37 வயது ஆகிறது. வயது முதிர்ந்த போதிலும், அவர் உலகின் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராகத் தொடர்கிறார். விராட் […]
HBD Virat Kohli

You May Like