டிசம்பர் 2024-ல் ஹைதராபாத் சிக்கட்பள்ளி பகுதியில் நடைபெற்ற ‘புஷ்பா 2’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியின் போது ஏற்பட்ட நெரிசல் (Stampede) சம்பவம் தொடர்பாக போலீஸார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் அவரது பாதுகாப்பு குழுவினர் உள்ளிட்ட மொத்தம் 23 பேரின் பெயர்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், நிகழ்ச்சி ஏற்பாடு, பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் ரசிகர்கள் கூட்டத்தை சரியாக கட்டுப்படுத்தாதது போன்ற அம்சங்கள் குறித்து போலீஸார் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் திரையரங்க நிர்வாகம் முக்கிய குற்றவாளியாகப் பெயரிடப்பட்டுள்ளதாகவும், அல்லு அர்ஜுன் 11-வது குற்றவாளியாகப் சேர்க்கப்பட்டுள்ளது. திரையரங்க நிர்வாகமும் கூட்டத்தை சரியாக கட்டுப்படுத்தத் தவறியதற்காக பொறுப்பேற்க வேண்டியவர்கள் என போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர்..
என்ன நடந்தது?
கடந்த ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி சந்தியா திரையரங்கில் ‘புஷ்பா 2’ திரைப்படத்தின் திரையிடலின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 35 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் அவரது எட்டு வயது மகன் காயமடைந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக அல்லு அர்ஜுன் முன்னர் கைது செய்யப்பட்டிருந்தார். திரைப்படத்தின் திரையிடலின் போது நடிகரைப் பார்ப்பதற்காக ரசிகர்கள் கூடியிருந்தபோது இந்தக் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து நகரக் காவல்துறை அல்லு அர்ஜுன் மீது வழக்குப் பதிவு செய்தது.
உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், சிக்கட்பள்ளி காவல் நிலையத்தில் அவரது பாதுகாப்புக் குழுவினர் மற்றும் திரையரங்க நிர்வாகத்தின் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக அல்லு அர்ஜுன் 2024 டிசம்பர் 13 அன்று கைது செய்யப்பட்டார். தெலங்கானா உயர் நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியதையடுத்து, அவர் அடுத்த நாள் விடுவிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு வழக்கமான ஜாமீன் வழங்கப்பட்டது.
அல்லு அர்ஜுன் மற்றும் புஷ்பா திரைப்படத் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கினர். தெலங்கானா அரசும் அந்தக் குடும்பத்திற்கு இழப்பீடு அறிவித்தது.
Read More : 2025-ன் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படம்! வெறும் 21 நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் கிளப்பில் இணைந்த துரந்தர்!



