வாக்காளர் நீக்க மோசடிகளில் ஈடுபட்டவர்களை தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பாதுகாப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுகளை இந்திய தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.. அவரின் குற்றச்சாட்டுகள் தவறானது என்றும் ஆதாரமற்றது என்றும் இந்திய தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை நிராகரித்தது.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ஸ்ரீ ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுகள் தவறானவை, ஆதாரமற்றவை. ராகுல் காந்தி தவறாகக் கருதியது போல, எந்தவொரு வாக்காளரையும் ஆன்லைனில் நீக்க முடியாது. உரிய நடைமுறை இல்லாமல் எந்த வாக்காளரையும் பட்டியலில் இருந்து நீக்க முடியாது.. பாதிக்கப்பட்ட நபருக்குக் கேட்கும் வாய்ப்பை வழங்காமல் எந்த வாக்காளரையும் பட்டியலில் இருந்து நீக்க முடியாது.” என்று தெரிவித்தார்..
கர்நாடகாவின் ஆலந்த் தொகுதி தொடர்பாக காந்தி எழுப்பிய பிரச்சினையில், 2023 ஆம் ஆண்டில் மோசடியாக வாக்காளர்களை நீக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக ஆணையம் ஒப்புக்கொண்டது, ஆனால் அவை தோல்வியடைந்தன என்பதை தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.. இந்த விவகாரம் விசாரிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக தேர்தல் ஆணையமே ஒரு FIR பதிவு செய்தது.
ஆலந்த் தொகுதியிதில் நடந்த தேர்தல்கள் நியாயமான முடிவுகளைப் பிரதிபலித்ததாகவும், 2018 இல் பாஜகவின் சுபாத் குட்டேதரும் 2023 இல் காங்கிரஸின் பி.ஆர். பாட்டீலும் வெற்றி பெற்றதாகவும் தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டியது.
ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு
முன்னதாக, ராகுல் காந்தி தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது கடுமையான குற்றச்சாட்டை முன்வைக்க தொடங்கினார்.. தேர்தல் ஆணையர் வாக்கு மோசடி செய்பவர்களையும், இந்திய ஜனநாயகத்தை அழித்தவர்களையும்” பாதுகாப்பதாகக் குற்றம் சாட்டினார். கர்நாடகாவின் ஆலந்த் மற்றும் மகாராஷ்டிராவின் ராஜுரா தொகுதிகளில் இருந்து நிகழ்வுகளை மேற்கோள் காட்டி, தானியங்கி மென்பொருளைப் பயன்படுத்தி நாடு முழுவதும் வாக்காளர் நீக்கம் முறையாக மேற்கொள்ளப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார்.
வாக்காளர் நீக்கம் தொடர்பான தொழில்நுட்ப விவரங்களைக் கோரி கர்நாடக சிஐடி கடந்த 18 மாதங்களில் தேர்தல் ஆணையத்திற்கு 18 முறை கடிதம் எழுதியதாகவும், ஆனால் தேர்தல் ஆணையம் அந்தத் தகவலைப் பகிர்ந்து கொள்ளவில்லை என்றும் காந்தி கூறினார்.
“இதை யார் செய்கிறார்கள் என்பது தேர்தல் ஆணையத்திற்குத் தெரியும். அவர்கள் ஜனநாயகத்தின் கொலையாளிகளைப் பாதுகாக்கிறார்கள்,” என்று எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சாட்டினார், அதே நேரத்தில் “வாக்கு திருட்டு” பற்றிய “ஹைட்ரஜன் குண்டு” ஆதாரங்களை விரைவில் வெளியிடுவதாக உறுதியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது..