ரஜினி ஆளுநராக போகிறராம்.. அதுவும் இந்த மாநிலத்திற்கு.. வெளியான புதிய தகவல்…

கடந்த மாதம் நடிகர் ரஜினிகாந்த் ஆளுநரை சந்தித்ததும், ஆளுநரிடம் அரசியல் பேசியதாக கூறியதும் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.. மேலும் தான் பேசியது என்பது குறித்து தற்போது கூற முடியாது என்று ரஜினி கூறியது பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுத்தது.. தனது உடல்நிலை காரணமாக அரசியலில் ஈடுபடப்போவதில்லை ரஜினி கூறியதில் இருந்தே பெரிதாக எந்த பேச்சும் எழவில்லை.. ஆனால் ரஜினிகாந்தின் சமீபத்திய டெல்லி பயணம், அதை தொடர்ந்து அவர் தமிழக ஆளுநரை சந்தித்து பேசியது என அடுத்தடுத்த சம்பவங்கள் மீண்டும் பரபரப்பை கிளப்பியது…

மீண்டும் அரசியலுக்கு வருகிறாரா ரஜினி? சகோதரர் சத்தியநாராயண ராவின் பதிலால் ரசிகர்கள் மகிழ்ச்சி..!

தென் மாநிலங்களில் கர்நாடகாவை தவிர, பாஜக எந்த மாநிலத்திலும் ஆட்சியில் இல்லை.. எனவே தமிழகத்தில் ஆபரேஷன் லோட்டஸ் என்ற வழக்கமான பார்முலாவை கையில் எடுத்துள்ளது பாஜக.. அதற்கு பாஜக முதல் சாய்ஸ் ரஜினி தானாம்.. எனவே ரஜினிக்கு ஆளுநர் பதவி வழங்குவதாகவும், அதற்கு ரஜினியும் ஓ.கே. சொல்லிவிடதாகவும் கூறப்படுகிறது.. கடந்த ஒரு மாதமாகவே ரஜினி ஆளுநராக போகிறார் என்ற தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.. ஏதாவது ஒரு சிறிய மாநிலத்தின் ஆளுநராக ரஜினியை நியமிக்க பாஜக தலைமை பரிசீலித்து வருகிறதாம்.. அந்த வகையில் பிரபல ஆங்கில தொலைக்காட்சி ஒன்று ரஜினி தமிழ்நாடு ஆளுநராகப் போகிறார் என்ற ரீதியில் செய்தி வெளியிட்டது..

ஆனால் தற்போது மற்றொரு தகவல் வெளியாகி உள்ளது.. அதாவது ரஜினியை கர்நாடக மாநிலத்திற்கு ஆளுராக நியமிக்க பாஜக திட்டமிட்டுள்ளதாம்.. ஒருவரை தனது சொந்த மாநிலத்திற்கே எப்படி ஆளுநராக்க முடியும் என்ற கேள்வி எழுந்தாலும், அது எந்தளவு உண்மை என்பது தெரியவில்லை.. எது எப்படியோ ரஜினிக்கு ஆளுநர் பதவி கன்பார்ம், ஆனால் அது எந்த மாநிலம் என்பது தெரியவில்லை.. ஒருவேளை ரஜினி வெளிப்படையாக பாஜக ஆதரவாளர் என்று கூறினால் அது வாக்கு அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.. ஆனால் ரஜினியை ஆளுநராக்கினால் தமிழகத்தில் பாஜகவுக்கு அது எந்த வகையில் உதவும் என்ற கேள்வியும் எழுகிறது.. பார்ப்போம் என்ன நடக்கிறது என்று..

Maha

Next Post

அதிமுக பொதுக்குழு வழக்கு..! உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார் ஓபிஎஸ்..!

Tue Sep 6 , 2022
அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். கடந்த ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பு அளித்தார். இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்குகளை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு கடந்த 2ஆம் தேதி விசாரித்தது. அப்போது, அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து வழக்கு […]
புதிய அரசியல் கட்சி தொடங்குகிறார் ஓபிஎஸ்..? அடிமேல் அடி விழுந்ததால் பயங்கர அப்செட்..!!

You May Like