தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் விஜய். இவர் தற்போது சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலுமே பிசியாக இருந்து வருகிறார். விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு மும்மரமாக நடந்து வருகிறது. இப்படம் முடிந்ததும், அவர் முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளார். இது ஒருபுறம் இருக்க, அவ்வபோது கட்சி சார்பில் நடத்தப்படும் கூட்டங்களிலும் விஜய் பங்கேற்று வருகிறார்.
இதற்கிடையே, சமீபத்தில் நடந்து முடிந்த 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கி கௌரவிக்க உள்ளார். இந்த சூழலில் தான், விஜய் மீது நீண்ட வருடங்களாக ரஜினிக்கு பகை இருப்பதாக ப்ளூ சட்டை மாறன் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “சினிமாவில் ரஜினியை பின்னுக்கு தள்ளி விஜய் முதலிடம் பிடித்ததால், அவர் மீது ரஜினிக்கு காண்டு இருக்கிறது. அதனால் தான், ஜெயிலர் பட விழாவில் காக்கா, கழுத என கதை சொல்லி கதறி, என்னுடைய பட்டத்தை பறிக்க 100 பேர் என்று பதறினார்.
இதுபோக, வரும் தேர்தலில் விஜய் வெற்றிபெற்றுவிட்டால், ரஜினியால் தாங்கிக்கொள்ளவே முடியாது. இதனால், தற்போது தனது குள்ளநரி தந்திர வேலைகளை ஆரம்பித்து விட்டார் ரஜினி. அண்ணாமலையை தனிக்கட்சி ஆரம்பிக்க வைப்பதன் பின்னணியில் ரஜினி இருப்பதாக தமிழா பாண்டியன் கூறியுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாட்டை ஆள ஒரு இளைஞர் வரப்போகிறார் என ரஜினி குறிப்பிட்டார். அதன்பிறகு அண்ணாமலை பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார்.
தற்போது, அண்ணாமலை நீக்கப்பட்ட பிறகு, ரஜினிக்கு பிடித்த இமயமலை பாபா குகையில் அண்ணாமலை வழிபட்ட ஃபோட்டோ வெளியானது. இவர் தனிக்ட்சி ஆரம்பித்து ஓரளவு வாக்கு வங்கி பெற்றதும், மீண்டும் பாஜகவில் இணைந்து விடுவார். இதுதான் ரஜினியின் மாஸ்டர் ப்ளான். இதுகுறித்து மேலும் பல தகவல்களை கூறியுள்ளார் பாண்டியன்” என்று ப்ளூ சட்டை மாறன் பதிவிட்டுள்ளார். மேலும், வழக்கம்போல ரஜினியின் இந்த ராஜதந்திரமும் வீணாகப்போவது உறுதி” என்று தெரிவித்துள்ளார்.