2026 சட்டசபை தேர்தலுக்கான கவுன்ட் டவுன் தொடங்கிவிட்டது. தமிழகத்தில் திமுக ஆட்சி தான் அமையும் என்ற நிலைப்பாடோடு முதல்வர் ஸ்டாலின் அதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கிறார். மறுப்பக்கம் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுகவை தமிழகத்தில் நிலைநாட்ட வேண்டும் என்ற இபிஎஸ் அதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கின்றார்.
இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக – பாஜக கூட்டணி, நாம் தமிழர், தவெக கட்சிகள் இடையே நான்கு முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. தேர்தல் நெருங்கும் இந்த சூழலில் இன்னும் ஒரு சில கட்சிகள் கூட்டணி குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடாமல் உள்ள நிலையில் முக்கிய கட்சிகளை தங்கள் வசம் இழுக்க திமுக திட்டம் தீட்டி வருகிறது.
அதேசமயம் திமுக கூட்டணியில் பாமக தலைவர் ராமதாஸ் தலைமையிலான கட்சி இணைய வாய்ப்பு இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சில மாதங்களுக்கு முன்பாக விசிக, பாமக ஒரு அணியில் இருக்க முடியாது என பேசி வந்த திருமாவளவன், சமீபத்தில் திமுக கூட்டணியில் ராமதாஸ் வருகிறாரா? என்ற கேள்விக்கு சைலண்டாக சென்றார். இந்நிலையில் நேற்று இரவு, திமுக கூட்டணியில் உள்ள கொமதேக தலைவர் ஈஸ்வரன் திடீரென ராமதாஸை சந்தித்து பேசியுள்ளார். இது அன்புமணி தரப்பினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read more: இந்த ஒரு ஜூஸ் போதும்.. எடை குறையும்.. சருமமும் கூந்தலும் பளபளப்பாகும்..!!



