2026 சட்டசபை தேர்தலுக்கான கவுன்ட் டவுன் தொடங்கிவிட்டது. தமிழகத்தில் திமுக ஆட்சி தான் அமையும் என்ற நிலைப்பாடோடு முதல்வர் ஸ்டாலின் அதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கிறார். மறுப்பக்கம் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுகவை தமிழகத்தில் நிலைநாட்ட வேண்டும் என்ற இபிஎஸ் அதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கின்றார்.
இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக – பாஜக கூட்டணி, நாம் தமிழர், தவெக கட்சிகள் இடையே நான்கு முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. தேர்தல் நெருங்கும் இந்த சூழலில் இன்னும் ஒரு சில கட்சிகள் கூட்டணி குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடாமல் உள்ள நிலையில் முக்கிய கட்சிகளை தங்கள் வசம் இழுக்க அதிமுக திட்டம் தீட்டி வருகிறது.
அதேசமயம் திமுக கூட்டணியில் பாமக தலைவர் ராமதாஸ் தலைமையிலான கட்சி இணைய வாய்ப்பு இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாமக யாருடன் கூட்டணி அமைக்கும் என எதிர்பார்ப்பு இருந்தது. இபிஎஸ் பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்து பல மணி நேரம் பேசிய நிலையில், பாமக -அதிமுக கூட்டணி இணையும் என எதிர் பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் ராமதாஸ் சைலண்டாக சில நிபந்தனைகளுடன் திமுகவுக்கு ஓகே சொல்லி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், சீட் பேச்சுவார்த்தை முடிவுக்கு வரும் வரை பாமக அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தவிர்க்கிறது. இதனால், திமுக கூட்டணிக்குள் கணக்கீடுகள் புதிதாக மாறும் நிலை உருவாகியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர். இது அன்புமணி தரப்பினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



