ராஞ்சி மதுக்கடைக்குள் புகுந்த குரங்கு..! பாதி பாட்டில் மதுவை குடித்துவிட்டு மயங்கி விழுந்தது..!

ranci monkey

ராஞ்சியில் உள்ள மதுக்கடைக்குள் திடீரென புகுந்த குரங்கு ஒன்று, மதுபாட்டிலை எடுத்து குடித்துவிட்டு அங்கே இருந்த மது பெட்டிகள் மீது மயங்கி விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியின் ஒர்மாஞ்சி சவுக் பகுதியில் மதுக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. வழக்கம்போல் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென ஒரு குரங்கு மதுக்கடைக்குள் புகுந்தது. அப்போது அங்கிருந்த ஊழியர்கள் முதலில் கடைக்குள் வந்த குரங்கை வெளியேற்ற முயன்றனர். அதனை திசைதிருப்புவதற்காக பிஸ்கெட்டுகளை கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், அங்கிருந்து செல்லாமல் கடைக்குள் சுற்றித்திரிந்த குரங்கு மதுபாட்டில் ஒன்றை எடுத்து பின்னர் அந்த பாட்டிலை உடைத்து அதில் இருந்த மதுவை சுமார் பாதி பாட்டில் அளவிற்கு குடித்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்த கடை ஊழியர்கள் மற்றும் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

மது குடித்த சிறிது நேரத்திலேயே குரங்கின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டு மது பெட்டிகள் வைக்கப்பட்டிருந்த இடத்திற்குச் சென்று, ஒரு அட்டைப்பெட்டிமீது படுத்து மயக்க நிலையில் தூங்கியுள்ளது. நீண்ட நேரம் கடைக்குள் இருந்து அது எழுந்திருக்காமல் இருந்ததால், சம்பவத்தை பார்த்தவர்கள் ஆச்சரியமடைந்தனர்.மேலும் இந்த காட்சியை அங்கிருந்தவர்கள் தங்களது செல்போன்களில் வீடியோவாக பதிவு செய்தனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

Also Read:கர்ப்பிணி பெண்களுக்கான ரயில் பயணத்தில் இப்படி ஒரு வசதியா? பலருக்கும் தெரியாத முக்கிய தகவல்!

Newsnation_Admin

Next Post

தூக்கில் சடலம்.. த.வெ.க. நிர்வாகி தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்: மனைவி கைது!

Sun Sep 27 , 2026
கள்ளத்தொடர்பு ஒரு குடும்பத்தில் உருவாக்கும் பிரச்சினை, கணவன்-மனைவி இடையேயான நம்பிக்கையை மட்டுமின்றி, ஒட்டுமொத்த குடும்ப உறவுகளையும் பாதிக்கும். சந்தேகம், கருத்து வேறுபாடு, தொடர் தகராறு என பிரச்சினைகள் தீவிரமடையும் நிலையில், சில சம்பவங்கள் எதிர்பாராத விபரீதங்களிலும் முடிகின்றன. குறிப்பாக, திருமண வாழ்க்கையில் ஏற்படும் இதுபோன்ற பிரச்சினைகள் குழந்தைகளின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். குடும்பத்துக்குள் நீடிக்கும் கருத்து மோதல்கள் சில நேரங்களில் சட்டரீதியான பிரச்சினையாகவும் மாறுகின்றன. அப்படியொரு சம்பவம் தான் புதுக்கோட்டை […]
WhatsApp Image 2026 09 27 at 4.52.02 PM

You May Like